📅 Wednesday, 18 November 2026 IST | கார்த்திகை 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics June 08, 2026 01:00 PM

அதிமுக என்ற மின்சார கம்பியில் கை வைக்க வேண்டாம் அது ஷாக்கடிக்கும்

அதிமுக என்ற மின்சார கம்பியில் கை வைக்க வேண்டாம் அது ஷாக்கடிக்கும்

அதிமுக என்ற மின்சார கம்பியில் கை வைக்க வேண்டாம் அது ஷாக்கடிக்கும் - அமைச்சருக்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை !

"மின்சார திருட்டையும் தடுக்க முடியாத மின்சார துறை அமைச்சர் நிர்மல் குமார் அவர்களே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற மின்சார கம்பியிலே கை வைக்க வேண்டாம் அது ஷாக்கடிக்கும்" - என கூறினார்.

மின்வெட்டையும் மின்டிஸ்க்கையும் தடுக்க தவறிய மின்சார துறை அமைச்சர் நிர்மல் குமார் அதிமுக என்ற மின்சார கம்பியில் கை வைக்க வேண்டாம் அது ஷாக்கடிக்கும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எச்சரிக்கை.

ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில் - பேசியுள்ளது

"தன்னுடைய பதவி சுகத்திற்காகவும், பதவி பவுசுக்காகவும், இந்த பச்சோந்தி அமைச்சர் நிர்மல் குமார் கொஞ்சம் பழசையெல்லாம் நினைத்து பார்க்க வேண்டும். அதிமுகவின் கருத்து சொல்வது பற்றி கொஞ்சம் நாவடக்கம் தேவை. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இது கடைசி அத்தியாயம் என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆயுளை நிர்ணயிக்க இவருக்கு என்ன தகுதி இருக்கிறது, என்று யோக்கியதை இருக்கிறது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆயுளை நீங்கள் நிரூபிப்பதற்கு முன்பாக நிர்மல் குமார் அவர்களே உங்கள் பொது வாழ்க்கைக்கு நீங்கள் ஈடுபட்ட அந்த வரலாறு தெரியாதவர்களுக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். ஆனால், அவரோடு பயணித்த மதுரை மக்களுக்கு புரியும் நிர்மல்குமார் போகாத கட்சியே இல்லை தற்போது த.வே.கவின் அவதார புருஷன் போல பேசுகிறார்.

உழைத்தவர்கள் யார்

இவருக்கு முன்னாலேயே ஆரம்ப கட்டத்திலேயே விஜய் மன்றத்திலே தங்கபாண்டியன், கல்லணை போன்றவர்கள் எல்லாம் ஆரம்ப காலகட்ட விஜய் மன்றத்தில் உள்ளவர்கள். அந்த தம்பிகளுடன் எல்லாம் நாங்கள் 2011 அம்மாவின் தலைமையில் அப்போது சட்டமன்றத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உழைத்தார்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வெற்றிக்கு பாடுபட்ட அந்த தம்பிகளுடன் எல்லாம் எங்களுக்கு நெருங்கிய தொடர்புண்டு. அந்த தம்பிகளெல்லாம் விஜயை உயிராக மதித்து விஜய் தான் உலகம் என்று மதித்து விஜய் தான் எங்களுக்கு எல்லாம் என்று உழைத்து வருகிற அந்த தம்பிகள். இன்றைக்கு கல்லாணை வடக்கு தொகுதியிலும், மதுரை மேற்கு தொகுதியில் தங்கபாண்டியனும் வெற்றி பெற்றுள்ளனர். விஜய் மன்றம் என்று சொன்னால் தங்கபாண்டியன், கல்லணை போன்றவர்கள் தான் அனைவருக்கும் தெரியும் .

எதிர்கால ஜாதகத்தை பார்க்க வேண்டாம்

நினைவூட்ட எச்சரிக்கையாக சொல்லுகிறேன்

இன்றைக்கு எடப்பாடியார் அரசினுடைய குற்றங்களையும் இயலாமையும் எழுப்பி வருகிறார்மின்சார வாரியத்தில் டிஸ்க் காணாமல் போச்சு என்று சொல்கிறார்கள் வரலாற்றில் இதுவரை ஒரு அரசினுடைய ஆவணம் காணாமல் போனது இல்லை இதை சாதாரணமாக நாம் கடந்து போக முடியாது.

மக்களையும், தொண்டர்களையும் ஏமாற்ற தெரியாது

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி