📅 Wednesday, 02 September 2026 IST | ஆவணி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 02, 2026 09:04 PM

அதிமுகவும் நாமும் ஒன்றுதான்: அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் சிரிப்பலை

அதிமுகவும் நாமும் ஒன்றுதான்: அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் சிரிப்பலை

அதிமுகவும் நாமும் ஒன்றுதான்: அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் சிரிப்பலை

சென்னை: தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் பிரகாசம்(தவெக) கேள்விக்கு, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதில் அளிக்கையில் திருவள்ளூர் மாவட்டம் எங்கள் மாவட்டம், பத்துக்கு பத்து இடமும் வெற்றி பெற்ற இடம் எனக் கூறினார்.

அப்போது, திருத்தணி அதிமுக உறுப்பினர் ஹரி, 9 தான் வெற்றி எனக் கூறினார். உடனே சுதாரித்துக் கொண்ட அமைச்சர், அதுவும் நமது வெற்றி தான், நான் புரட்சித்தலைவரையும் அம்மாவும் உள்ள அதிமுகவை கூறுகிறேன் என சமாளித்தார். இதனால், அவையில் சிரிப்பு ஏற்பட்டது, தொடர்ந்து அமைச்சர் திருவள்ளூர் மாவட்டத்தில் எங்கெல்லாம் மேம்பாலம் வேண்டுமோ அங்கெல்லாம் கட்டித் தரப்படும் என கூறினார்.