📅 Wednesday, 16 September 2026 IST | ஆவணி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 16, 2026 09:33 PM

அடுத்த ஹர்திக் பாண்டியா இவர்தான்.. இளம் ஆல்

அடுத்த ஹர்திக் பாண்டியா இவர்தான்.. இளம் ஆல்

அடுத்த ஹர்திக் பாண்டியா இவர்தான்.. இளம் ஆல்-ரவுண்டர் ஏசியன் கேம்ஸில் நீக்கம்.. ODI அணியில் சேர்ப்பு

மும்பை: ஜப்பானில் நடைபெறவுள்ள 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து இளம் ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி அதிரடியாக நீக்கப்பட்டு இருக்கிறார். அதே சமயம், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆட உள்ள இந்திய ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பிசிசிஐ-யின் இந்த திடீர் முடிவின் பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் செப்டம்பர் 27 அன்று தொடங்குகிறது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 2027 ஒருநாள் உலகக் கோப்பையைக் கருத்தில் கொண்டு, தரமான வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரைத் தயார் செய்ய பிசிசிஐ தீவிரம் காட்டி வருகிறது.

இந்திய அணியின் அனுபவ வேகப் பந்துவீச்சு ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்டியா இன்னும் முழு உடற்தகுதியுடன் 50 ஓவர் போட்டிகளில் பந்துவீசத் தயாராகவில்லை. அவருக்கு அடிக்கடி காயம் ஏற்படுவதால் அவருக்கு மாற்றாக ஒரு வேகப் பந்துவீச்சு ஆல்-ரவுண்டரை ஒருநாள் அணியில் சேர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய நிதிஷ் ரெட்டியை ஒருநாள் அணியில் சோதிக்க தேர்வுக்குழு முடிவு செய்துள்ளது.

இதற்கிடையில், ஆப்கானிஸ்தான் தொடரின் போது விலா பகுதியில் தசைநார் காயம் அடைந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டியில் இருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக டெல்லி கேபிடல்ஸ் அணியின் 21 வயது இளம் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் விப்ராஜ் நிகம் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி ஜப்பானில் செப்டம்பர் 22 அன்று ஜப்பான் அணிக்கு எதிராக ஒரு டி20 போட்டியிலும், பின்னர் செப்டம்பர் 24 முதல் ஆசிய விளையாட்டுப் போட்டியின் காலிறுதிச் சுற்றிலும் களமிறங்குகிறது.

மாற்றியமைக்கப்பட்ட ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணி: ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், சிவம் துபே, திலக் வர்மா (துணை கேப்டன்), அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வைபவ் சூர்யவன்ஷி, யாஷ் தாக்கூர், விப்ராஜ் நிகம்.