அய்யோ ஷகிலாவிற்கு என்ன ஆச்சு.. கழுத்தில் ஆப்ரேஷன்.. என்னால முடியால என வேதனை!
சென்னை: நடிகை ஷகிலாவிற்கு கழுத்துப்பகதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர் கழுத்தில் பேண்டுடன் மருத்துவமனையில் இருந்து வெளியே வரும் போட்டோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது.
நடிகை ஷகிலா: மலையாள ஆபாச படத்தில் நடித்து வந்த ஷகிலா, பின்னாளில் மலையாள சினிமாவின் டாப் நடிகையாக மாறினார். 90 கால கட்டத்தில் நடிகை ஷகிலா பல கவர்ச்சி படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே வைத்து இருந்தார். ஷகிலாவின் படம் வெளியானால மலையான டாப் நடிகர்களே பயப்படும் அளவிற்கு, ஷகிலாவின் படம் மட்டும் தான் கல்லாகட்டும். அந்த அளவிற்கு டாப்பில் இருந்த ஷகிலா பின் நாளில் ஆபாச படங்களின் நடிப்பதை தவிர்த்துவிட்டு, விஜய், அஜித், சிம்பு உள்ளிட்ட ஸ்டார் நடிகர்களின் படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பின் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய பெயரை மாற்றிய ஷகிலா தொடர்ந்து, யூடியூப் சேனல்களில் பல பிரபலங்களை பேட்டி எடுத்து வந்தார்.
கழுத்தில் ஆப்ரேஷன்: இந்நிலையில், நடிகை ஷகிலாவிற்கு கழுத்தில் பிரச்சனை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து தற்போது அவருக்கு கழுகுத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின் வீடியோ வெளியிட்டு இருக்கும் ஷாகிலா, நான் செல்போனை அதிக நேரம் பயன்படுத்துவேன்,எனக்கு கேம்ஸ் விளையாடும் பழக்கம் இருக்கு, நான் படுக்கையில் ஒரு பக்கமாக படுத்து பல மணிநேரம் கேம்ஸ் விளையாடினேன். இதனால் கழுத்தில் உள்ள முக்கிய ரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டது. இதனால், தற்போது அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும், ஆப்ரேஷனுக்கு மூன்று லட்சம் செலவானதாகவும், சாப்பிடுவது நடப்பது போன்ற அடிப்படை தேவைகளுக்கு கூட மற்றவர்களின் உதவி தேவைப்படுவதாக வேதனையுடன் வீடியோவில் ஷகிலா பேசி உள்ளார். மேலும், குழந்தைகளுக்கு செல்போனை கொடுக்காதீர்கள் என பெற்றோர்களுக்கு ஷகிலா அறிவுரை கூறி உள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலர் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என இணையத்தில் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.