📅 Sunday, 04 October 2026 IST | புரட்டாசி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports July 20, 2026 05:33 AM

அழாதீங்க மெஸ்ஸி! மகுடம் இல்லனாலும் நீங்க அரசன் தான்.. கட்டி அணைத்த ஸ்பெயின் 19 வயது வீரர் யமால்

அழாதீங்க மெஸ்ஸி! மகுடம் இல்லனாலும் நீங்க அரசன் தான்.. கட்டி அணைத்த ஸ்பெயின் 19 வயது வீரர் யமால்

அழாதீங்க மெஸ்ஸி! மகுடம் இல்லனாலும் நீங்க அரசன் தான்.. கட்டி அணைத்த ஸ்பெயின் 19 வயது வீரர் யமால்

நியூயார்க்: 2026 ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதின. இதில் 120 நிமிடங்களுக்கு மேல் களத்தில் எதிரெதிர் துருவங்களாக நின்ற லியோனல் மெஸ்ஸியும், லாமின் யமாலும், போட்டி முடிந்த மறுகணமே ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து தங்களது அன்பைப் பகிர்ந்து கொண்டனர்.

ஒரு மாபெரும் சகாப்தம் விடைபெறுவதையும், புதிய சகாப்தம் தொடங்குகிறது என்பதை குறிக்கும் விதமாக இந்த நிகழ்வை ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர். இறுதிப் போட்டியில் கூடுதல் நேரத்தில் ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்தது.

இந்த வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு மத்தியில், இறுதி விசிலுக்குப் பிறகு இரு நட்சத்திரங்களும் பகிர்ந்து கொண்ட அன்பு, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. உலக கால்பந்து வரலாற்றில் தலைசிறந்த வீரராகக் கொண்டாடப்படும் மெஸ்ஸியும், அடுத்த தலைமுறையின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ள இளம் வீரர் யமாலும் இதில் இணைந்திருந்தனர்.

வெறும் 19 வயதே ஆன பார்சிலோனா அணியின் லாமின் யமால், தனது கால்பந்து பயணத்தில் மற்றுமொரு சாதனையைப் படைத்துள்ளார். ஸ்பெயின் அணி யூரோ 2024 பட்டத்தை வெல்ல முக்கியக் காரணமாக இருந்த அவர், தற்போது உலகக் கோப்பை மகுடத்தையும் தனது வசம் சேர்த்துள்ளார். இதன் மூலம் மிகக் குறைந்த வயதில் இவ்விரு முக்கிய சர்வதேசக் கோப்பைகளையும் வென்ற இளம் வீரர்களில் ஒருவராக யமால் சாதனை படைத்துள்ளார்.

மறுபுறம், அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி ஏற்கனவே 2021 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் கோபா அமெரிக்கா பட்டங்களையும், 2022 இல் உலகக் கோப்பையையும் வென்று அரிய சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி தனது வழக்கமான ஆதிக்க ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறியது. ஸ்பெயின் அணியின் துல்லியமான ஆட்டமும், பலமான தடுப்பாட்டமும் அர்ஜென்டினாவின் முன்கள வீரர்களை முற்றிலுமாகக் கட்டிப்போட்டன.

ஆட்டத்தின் பெரும்பகுதியில் அர்ஜென்டினா அணியால் ஸ்பெயின் கோல் கம்பத்தை நோக்கி இலக்கு தவறாமல் பந்தை அடிக்க முடியவில்லை. கூடுதல் நேரத்தின் கடைசி நிமிடங்களில் மெஸ்ஸி கொடுத்த சிறப்பான பாஸை மார்கோஸ் செனேசி கோலாக்க முயன்றார், ஆனால் ஸ்பெயின் தடுப்பாட்ட வீரர்கள் அதனைத் துணிச்சலாகத் தடுத்து நிறுத்தினர்.

இதனால் 39 வயதான மெஸ்ஸி ஏமாற்றத்துடன் மைதானத்தை விட்டு வெளியேறினார். இருப்பினும், கால்பந்து விளையாட்டில் அவர் சாதிக்க வேண்டியவை என்று எதுவும் எஞ்சியிருக்கவில்லை. யமால் உலக கால்பந்தின் எதிர்காலமாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.