📅 Sunday, 20 September 2026 IST | புரட்டாசி 4, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 03, 2026 09:33 PM

சாதி பற்றி மேடையில் உளறிய பார்த்திபன்.. அப்புறம் நடந்த தரமான சம்பவம்.. நீதிமன்றத்தில் வழக்கு!

சாதி பற்றி மேடையில் உளறிய பார்த்திபன்.. அப்புறம் நடந்த தரமான சம்பவம்.. நீதிமன்றத்தில் வழக்கு!

சென்னை: இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் எதிலும் ஒரு வித்தியாசத்தை விரும்பக்கூடியவர். இவர் எதுகை மோனையாக பேசுவதை பேசுவதை கேட்பதற்கு என்ற தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது பார்த்திபன் சாதி மற்றும் மதமற்ற சான்றிதழ் பெற விரும்பும் தமிழக மக்கள் அனைவருக்குமாக ஒரு புதிய சட்டத்தையே இயற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு போட்டுள்ளார்.

ஹைதராபாத் சர்ச்சை : பார்த்திபன் சில மாதங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் நடைபெற்ற சினிமா விழா ஒன்றில், தனது சாதியைப் பற்றி எதிர்பாராமல் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, "து தவறுதலாகப பேசியது, எனக்கு சாதி, மதத்தின் மீது நம்பிக்கை இல்லை என்பதை தெளிவுப்படுத்தினார். அதோடு மட்டுமில்லாமல் தான் சாதி, மதமற்றவர் என்பதற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழை கோரி விண்ணப்பித்தார்.

நீதிமன்றம் சென்றார்: இந்த சான்றிதழ் கிடைக்க தாமதமான நிலையில், பார்த்திபன் நீதிமன்றத்திற்கு சென்று சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் அலுவலகம் மூலம் தனக்கான சாதியற்றவர் சான்றிதழை பெற்றார். ஆனால், தன்னோடு இந்த விஷயத்தை முடித்துக் கொள்ளாமல், வருங்காலத்தில் தங்களை சாதி,மதமற்றவர் என அறிவிக்க விரும்புபவர்கள் யாரும் அதிகாரிகளின் அலட்சியத்தால் அலைய கூடாது என்பதில் முனைவுடன் இருக்கும் பார்த்திபன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

புதுச் சட்டம் வேணும்: அந்த மனுவில் 2025-ஆம் ஆண்டிலேயே இதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், அப்போதைய அரசிற்கும் ஆளுநருக்கும் இடையே இருந்த பிரச்சனையால் புதிய சட்டங்கள் நிறைவேறாமல் போனது. ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டதால், தமிழக அரசு தாமதிக்காமல் உடனடியாக ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்றும், தகுதியுள்ள அனைவரும் தாமதமின்றி தடங்கலின்றி சான்றிதழ் பெற வழிவகை செய்ய வேண்டும் என பார்த்திபன் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

முக்கியத் தீர்ப்பு: தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது. சினிமாவில் வித்தியாசமான படங்களை கொடுத்து வரும் பார்த்திபன் நிஜ வாழ்க்கையிலும் இப்படி ஒரு புரட்சிகரமான சட்டப் போராட்டத்தைக் கையிலெடுத்திருப்பதை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.