சாய் பல்லவி லீடு.. சைடு ரோலில் ரகுல் ப்ரீத் சிங்.. ராமாயணத்துக்கு முன்பே இது நடந்திருக்கே!
சென்னை: சீதாவாக நடித்த சாய் பல்லவியை விட சூர்ப்பனகையாக நடித்த ரகுல் ப்ரீத் சிங் தான் பேரழகு என பாலிவுட் நெட்டிசன்கள் தென்னிந்திய நடிகையான சாய் பல்லவியை ட்ரோல் செய்து வரும் நிலையில், பதிலுக்கு சாய் பல்லவி இந்த படத்தில் மட்டுமில்லை ஏற்கனவே அவர் லீடு ரோலில் நடித்த படத்திலும் சைடு ரோலில் தான் ரகுல் ப்ரீத் சிங் நடித்தார் என பதிலடி கொடுத்து வருகின்றனர்.
ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ராமாயணா படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக காத்திருக்கிறது. இந்தியளவில் தீபாவளிக்கு பிளான் செய்யும் பெரிய படங்களுக்கு பெரிய ஆப்பு உள்ளது என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
4000 கோடி பட்ஜெட் என தயாரிப்பாளர் அடித்து விட்ட நிலையில், அதற்கு ஒர்த்தான படம் கிடையாது என தர்ம அடி விழ, படத்தின் பட்ஜெட் வெறும் 850 கோடி தான் என்றும் 4000 கோடி மதிப்புள்ள புராஜெக்ட் இது என முட்டுக் கொடுத்து வருகின்றனர்.
சாய் பல்லவியை சுற்றும் ட்ரோல்: சீதா கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவியை நடிக்க வைத்தது மிகப்பெரிய தவறு என்றும் அவர் அழகாக இல்லை. சுருள் முடியுடன் சீதா எங்கே இருந்தார் என ஏதோ இவர்களே திரேதா யுகத்திற்கு சென்று சீதா தேவியை பார்த்தது போல கேள்வி எழுப்பி சாய் பல்லவியை எந்தளவுக்கு அசிங்கப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு செய்து வருகின்றனர். ஆனால், அமரன், ஷியாம் சிங்கா ராய் உள்ளிட்ட படங்களில் நடித்தது போல தனது நடிப்பால் யஷ்ஷையே மிரள விட்டுள்ளார் சாய் பல்லவி என்பது தான் நிதர்சனமான உண்மை என நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
சூர்ப்பனகையாக ரகுல் ப்ரீத் சிங்: தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக நடித்து வந்த ரகுல் ப்ரீத் சிங் இந்த படத்தில் லக்ஷ்மனிடம் மூக்கு அறுபடும் சூர்ப்பனகையாக நடித்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங் தாமரை ஜாக்கெட் அணிந்துக் கொண்டு டிரைலரில் இடம்பெற்ற காட்சியை பார்த்த ரசிகர்கள் இவரையே சீதையாக நடிக்க வைத்திருக்கலாம் என்றும் சூர்ப்பனகை இவ்வளவு அழகா? அரக்கி இல்லையா? என ரசிகர்கள் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு ஃபயர் விட ஆரம்பித்துள்ளனர்.
ஏற்கனவே சாய் பல்லவியுடன்: செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்த என்ஜிகே படத்தில் ஏற்கனவே சாய் பல்லவியுடன் ரகுல் ப்ரீத் சிங் இணைந்து நடித்துள்ளார் என்றும் அந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங்குக்கு சைட் சிக் ரோல் என சாய் பல்லவி ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் பதிலடி கொடுத்து வருகின்றனர். ராமாயணா படத்துக்கு ஃப்ரீ புரமோஷன் பக்காவாக இதுபோன்ற சோஷியல் மீடியா சண்டை மற்றும் நெகட்டிவிட்டி மூலம் நல்லாவே நடக்கிறது என்றும் கூறுகின்றனர். எந்தவொரு நடிகராக இருந்தாலும் நடிகையாக இருந்தாலும் அவர்கள் நடிப்புத் திறனை தான் பார்க்க வேண்டும் என்றும் இப்படி மாற்றி மாற்றி அசிங்கப்படுத்திக் கொள்வது அழகல்ல என்பது குறிப்பிடத்தக்கது.