📅 Thursday, 30 July 2026 IST | ஆடி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema July 28, 2026 11:34 PM

சசிகுமாரின் “வதந்தி” சீசன் 2 வெப் தொடரின் பர்ஸ்ட் லுக் வெளியானது

சசிகுமாரின் “வதந்தி” சீசன் 2 வெப் தொடரின் பர்ஸ்ட் லுக் வெளியானது

சசிகுமார் நடிக்கும் ‘வதந்தி’ சீசன் 2 வெப் தொடரின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

கடந்த 2022ம் ஆண்டில் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான வெப் தொடர் ‘வதந்தி’. இதில் எஸ்.ஜே. சூர்யா, லைலா, சஞ்சனா, நாசர் ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். இந்த வெப் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. புஷ்கர் காயத்ரி தயாரித்த இந்த தொடருக்கு சைமன் இசையமைத்தார்.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து வதந்தி தொடரின் 2ம் பாகம் உருவான கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள ‘வதந்தி 2’ தொடரை வால் வாட்சர் பிலிம்ஸ் சார்பில் எஸ் குஹபிரியா, எஸ் நந்தகுமார் மற்றும் கவுதம் செல்வராஜ் இணைந்து தயாரித்துள்ளனர். முதல் சீசனை இயக்கிய ஆன்ட்ரூ லூயிஸ் இந்த சீசனையும் இயக்கி உள்ளார்.

இந்நிலையில், ‘வதந்தி’ தொடரின் சீசன் 2 புதிய பாகத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இந்த தொடரில் சசிகுமார் முதல் முறையாக போலீசாக நடித்துள்ளார். இந்த “வதந்தி” சீசன் 2 வெப் தொடரை, வால் வாட்சர் பிலிம்ஸ் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி தயாரித்துள்ளனர். ‘வதந்தி’ தொடரின் சீசன் 2 ஆகஸ்ட் 7-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Mark the date! August 7th #Vadhandhi returns for the 2nd season on @PrimeVideoIN This time it is @Sasikumardir who is on duty!!!Written and Directed by @andrewxvasanth#VadhandhiS2 #VadhandhiOnPrime@wallwatcherfilm @Padmak131 @AnaghaOfficial @aparnaDasss @actorvivekpra… pic.twitter.com/TZEZftfUUu