📅 Sunday, 18 October 2026 IST | ஐப்பசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 18, 2026 12:02 PM

சென்னை: அமைச்சர் பெயரை சொல்லி போலீஸுக்கு மிரட்டல் விடுத்த இளம்பெண்ணுக்கு வலை

சென்னை: அமைச்சர் பெயரை சொல்லி போலீஸுக்கு மிரட்டல் விடுத்த இளம்பெண்ணுக்கு வலை

ஆவடி: `அமைச்​சர் பர்​வேஸ் எனது மச்​சான்​தான்; உங்​கள் சீருடையை கழற்​றி​விடு​வேன்’ என இளம்​பெண் ஒரு​வர், நடுரோட்டில் போலீ​ஸாரை மிரட்​டிய காணொலி சமூக வலைதளங்​களில் வைரலான நிலை​யில் அவரது ஆண் நண்​பரை போலீஸார் கைது செய்​தனர்.

சென்னை மாதவரம் பகு​தி​யைச் சேர்ந்த தரணி (24) என்ற பெண்ணும் அவரது நண்​ப​ரான ஏழுகிணறு பகு​தி​யைச் சேர்ந்த முகமது ஜவாஹீர் (30) என்​பவரும் கடந்த 15-ம் தேதி மாலை அம்பத்​தூர் மங்​களபுரம் பகு​தி​யில் பைக்​கில் சென்று கொண்டிருந்தனர். அப்​போது ஆவடி​யில் இருந்து கோயம்​பேடு நோக்​கிச் சென்ற மாநகர பேருந்​தால் சாலை​யில் தேங்​கிய மழைநீர், தரணி மற்​றும் முகமது ஜவாஹீர் மீது தெறித்​த​தாக கூறப்​படு​கிறது.

இதனால் ஆத்​திரமடைந்த இரு​வரும் மாநகர பேருந்தை வழிமறித்து, ஓட்​டுநர் முரு​க​தாஸ் (58), நடத்​துநர் ரகு ஆகியோரிடம் ஆபாச​மான வார்த்​தைகளை பேசி கடும் வாக்​கு​வாதத்​தில் ஈடுபட்டதோடு, பேருந்​தில் பயணம் செய்த பயணி​களை​யும் கீழே இறங்​கு​மாறு கூறி​யுள்​ளனர். இதனால், பயணி​கள் மிகுந்த அவதிக்குள்​ளா​யினர். தகவலறிந்து வந்த அம்​பத்​தூர் தொழிற்பேட்டை போலீ​ஸாரிட​மும் தரணி வாக்​கு​வாதத்​தில் ஈடுபட்​டார்.

அப்​போது, அவர், ‘‘அமைச்​சர் பர்​வேஸ் எனது மச்​சான்​தான்; என் மீது நடவடிக்கை எடுத்​தால் உங்​கள் சீருடையை கழற்றி விடுவேன்’’ என மிரட்​டல் விடுத்​தார். இதுதொடர்​பான காணொலி சமூக வலை​தளங்​களில் வைரலாகி வரு​கிறது.

இதனிடையே, மாநகர பேருந்து ஓட்​டுநர் முரு​க​தாஸ் அளித்த புகாரின்​பேரில் அம்​பத்​தூர் தொழிற்​பேட்டை போலீ​ஸார் வழக்குப்பதிவு செய்​து, தரணி​யின் நண்​ப​ரான முகமது ஜவாஹீரை நேற்று முன்​தினம் இரவு கைது செய்​தனர். தலைமறை​வாகி​விட்ட தரணி​யை தீவிர​மாக தேடி வரு​கின்​றனர்​.