Chennai News Live Update: 18 மாவட்டங்களில் கனமழை - வானிலை மையம் தகவல்
கூட்டணி தர்மத்தை அதிமுக சற்றும் மதிக்கவில்லை. அவர்கள் தேமுதிகவுக்கு வழங்க வேண்டிய உரிய மரியாதையைத் தரவும் முன்வரவில்லை. எடப்பாடி பழனிசாமி , தேமுதிக எவ்வாறாவது தங்களது கூட்டணியில் இருந்து வெளியேறிவிட வேண்டும் என்று மட்டுமே தொடர்ந்து நினைத்துச் செயல்பட்டார்.
தற்போது அதிமுகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெக கட்சியில் இணைவது என்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கே ஒரு மிகப்பெரிய தலைகுனிவாகும்.
பதவிக்காகவும், சொகுசு சோபாவுக்காகவும் ஆசைப்படாத ஒரே நேர்மையான கட்சி தேமுதிக மட்டும்தான். யாரைத் 'தீய சக்தி' என்று தவெக விமர்சித்துப் பேசினார்களோ, தற்போது அதே தீய சக்தியின் ஆதரவோடுதான் அவர்களது ஆட்சியும் நடந்து கொண்டிருக்கிறது.
இவர்களை விமர்சிப்பதில் 'ஹனிமூன் பீரியட்' என்ற சலுகையையெல்லாம் பார்க்க முடியாது. தற்போதைய சூழலில் இது ஹனிமூன் பீரியட் அல்ல, மாறாக மக்களின் 'அவதிக் கால பீரியட்' என்றுதான் பொதுமக்களும் நினைக்கிறார்கள்.
#WATCH | "தேமுதிகவை கூட்டணியில் சேர்க்காத காரணத்தால் அதிமுக ICUவுக்கு சென்று விட்டது"இபிஎஸ்-ஐ கடுமையாக சாடிய பிரேமலதா விஜயகாந்த்#SunNews | #ADMK | #PremalathaVijayakanthpic.twitter.com/cLD5PUyyBc