Tamil Nadu
October 15, 2026 01:03 AM
சென்னையைக் குளிர்வித்த மழை!
தலைநகர் சென்னையில் வருவேனா மாட்டேனா என போக்குக் காட்டிக்கொண்டிருந்த மழை ஒருவழியாக இன்று வந்துசேர்ந்தது.
தென்சென்னையின் தென்கோடியில் தாம்பரம் சுற்றுவட்டாரம், பல்லாவரம், குரோம்பேட்டை ஆகிய பகுதிகளில் இன்று பிற்பகலில் ஒரு சுற்று மழை அடித்துப் பெய்தது.
பின்னர் நகரின் பல பகுதிகளிலும் மழை வருவதும் போவதுமாக இருந்துவந்தது.
மாலையில் ஆங்காங்கே இடியுடன்கூடிய இலேசான மழை பெய்துவருகிறது.
இதனால் கடுமையான கோடை வெப்பத்தால் புழுக்கத்தில் இருந்துவந்த சென்னை மக்கள் கொஞ்சம் ஆசுவாசம் அடைந்தனர்.
நாளை அக்டோபர் 15ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மழை தொடர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை மைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu