📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 16, 2026 11:04 AM

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1,13,760

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1,13,760

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1,13,760-க்கு விற்பனை...

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1,13,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.14,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரம் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.255-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச சந்தையில் ஏற்படும் சூழல்களை கணக்கில் கொண்டு தங்கம் விலை தினமும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. முன்னதாக தங்கம் விலை நேற்று காலையில் சவரனுக்கு ரூ.1,440 குறைந்த நிலையில் மாலையில் ரூ.1,280 அதிகரித்தது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை நேற்று மாலை சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ரூ.1,13,600-க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.