📅 Saturday, 29 August 2026 IST | ஆவணி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 29, 2026 10:04 AM

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 குறைந்து ஒரு சவரன் ரூ.1,17,200க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 குறைந்து ஒரு சவரன் ரூ.1,17,200க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 குறைந்து ஒரு சவரன் ரூ.1,17,200க்கு விற்பனை

சென்னை: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 குறைந்து ஒரு சவரன் ரூ.1,17,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ஒரு கிராம் ரூ.14,650க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.5 குறைந்து ரூ.260க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார நிலைமைகள், அமெரிக்க டாலரின் மதிப்பு மாற்றம், வட்டி விகித ஏற்றத்தாழ்வுகள், புவியியல் அரசியல் பதற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தங்கத்தின் விலை தினந்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் நேற்று சென்னையில் ஒரேநாளில் இரண்டு முறை தங்கத்தின் விலை குறைந்து விற்பனையானது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,280 குறைந்துள்ளது. ஒரு சவரன் ரூ.1,17,800க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.14,725க்கும் விற்பனையானது. காலையில் சவரனுக்கு ரூ.560 குறைந்தும் மாலையில் ரூ.1,720 குறைந்து சவரன் ரூ.1,17,800க்கு விற்பனை செய்யப்பட்டது.