தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,360 சரிவு.... இன்றைய நிலவரம் என்ன..?
தங்கத்தின் விலை கடந்த ஓரிரு நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக உள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் தங்கம் ஒரு கிராம் ரூ.14,725-க்கும், ஒரு சவரன் ரூ.1,17,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
நேற்று காலையில் கிராமுக்கு ரூ.75 குறைந்து, ரூ.14,650-க்கும், சவரனுக்கு ரூ.600 குறைந்து ரூ.1,17,200-க்கும் விற்பனையானது. இதற்கிடையில் மாலையில் தங்கத்தின் விலை திடீரென அதிகரித்தது. கிராமுக்கு ரூ.150-ம், சவரனுக்கு ரூ.1,200-ம் உயர்ந்தது. அந்த வகையில் ஒரு கிராம் ரூ.14,800-க்கும், ஒரு சவரன் ரூ.1,18,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.2,360 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,16,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.295 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,505-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.260-க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைந்து ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் விற்பனையாகி வருகிறது.