செப்.6 முதல் பிக்பாஸ் தமிழ் சீசன் 10
தமிழ் சின்னத்திரையின் பிரபலமான நிகழ்ச்சி ‘பிக்பாஸ்’. ஏராளமானோர் விரும்பும் இந்நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், இதன் 10-வது சீசன், செப். 6-ம் தேதி மாலை 6 மணி முதல் தொடங்க உள்ளது. ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும், ஸ்டார் விஜய் தொலைக்காட்சியிலும் ஒரே நேரத்தில் நேரலையாக ஒளிபரப்பாகிறது.
மேலும், பிக்பாஸ் வீட்டில் நடக்கும் அனைத்து சுவாரஸ்ய நிகழ்ச்சிகளையும் ரசிகர்கள் 24 மணி நேரமும் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் நேரடியாகப் பார்க்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இந்த 10-வது சீசனை முன்னிட்டு வெளியிடப்பட்ட ‘கார்னி விழா’ விளம்பரப் படம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இந்த சீசனின் தொடக்கத் தேதியை அறிவிக்கும் வகையில், விஜய் சேதுபதி இடம்பெற்றுள்ள ‘ஒட்டிக்கிச்சு’ என்ற சிறப்புக் பாடலும் வெளியிடப்பட்டுள்ளது.
இம்முறை பொதுமக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்களும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்கின்றனர். இதற்காக நடத்தப்பட்ட ‘பிக்பாஸ்: தி காமன் மேன்’ வெற்றியாளர்கள், போட்டியாளர்களுடன் இடம்பெறுவார்கள். விஜய் சேதுபதி இந்நிகழ்ச்சியை 2-வது ஆண்டாகத் தொகுத்து வழங்க இருக்கிறார்.