📅 Friday, 28 August 2026 IST | ஆவணி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 27, 2026 09:04 PM

அடித்தட்டு மக்களின் உயர்வுக்கு உறுதுணையாக இருக்கிற இயக்கம் திமுக

அடித்தட்டு மக்களின் உயர்வுக்கு உறுதுணையாக இருக்கிற இயக்கம் திமுக

அடித்தட்டு மக்களின் உயர்வுக்கு உறுதுணையாக இருக்கிற இயக்கம் திமுக - பேரவையில் கோவி.செழியன் பேச்சு

சென்னை: சட்டசபையில் இன்று சமூக நீதித்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மீதான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது. இதன் போது பேசிய திமுக உறுப்பினர் கோவி.செழியன், ஏட்டளவில் மட்டும் செயல்படக்கூடிய இயக்கம் அல்ல திமுக. அடித்தட்டு மக்களின் உயர்வுக்கு உறுதுணையாக இருக்கிற இயக்கம் தான் திமுக என சட்டப்பேரவையில் குறிப்பிட்டார்.

குடிசையில் இருப்பவர்கள் கோபுரத்தை எட்டக்கூடிய வகையில் குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கி, தாழ்த்தப்பட்டவர்களை விண்ணுயரச் செய்த இயக்கம் எங்ககளுடையது. இந்தியாவிலேயே முதன்முதலில் ஏழை எளிய மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் வழங்கப்பட்டது முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் தான்.

கோயிலுக்குள் நுழைய முடியாமல், தூரத்தில் நின்று கைகட்டி நின்ற ஆதிதிராவிடரைக் கோயில் அறங்காவலராக நியமித்தது திராவிட முன்னேற்ற கழக அரசுதான். 'அ' முதல் 'ஃ' வரை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வளர்ச்சியைக் கொண்டு வந்தது முத்தமிழறிஞர் கலைஞர் மற்றும் தி.மு.க. ஆட்சியில் தான் என்றும் கோவி.செழியன் பட்டியலிட்டு உள்ளார். எனவே சமூக பிரச்னையில் விதண்டாவாதம் பேசி மக்களிடையே அச்சத்தை உருவாக்க வேண்டாம் என தவெக அமைச்சர்களை கேட்டு கொண்டார்.