📅 Monday, 12 October 2026 IST | புரட்டாசி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Technology October 12, 2026 05:04 PM

செயற்கை நுண்ணறிவு மனிதர்களை மிஞ்ச வாய்ப்புள்ளது: டிக்டாக் தலைமை நிர்வாக அதிகாரி

செயற்கை நுண்ணறிவு மனிதர்களை மிஞ்ச வாய்ப்புள்ளது: டிக்டாக் தலைமை நிர்வாக அதிகாரி

தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சியால், எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு குறிப்பிட்ட சில துறைகளில் மனிதர்களை மிஞ்சக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன என்று டிக்டாக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சியூ சோ சீ தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை (அக்டோபர் 12) சன்டெக் சிங்கப்பூர் மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் நடைபெற்ற ‘டிபிஎஸ் ஏஷியா ஃபியூச்சர் ஃபார்வர்ட்’ மாநாட்டில் பேசிய அவர், செயற்கை நுண்ணறிவின் ஆற்றல் குறித்துப் பல்வேறு முக்கியக் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

டிபிஎஸ் வங்கியின் பயனீட்டாளர் வங்கி மற்றும் செல்வ நிர்வாகப் பிரிவின் தலைவரான ஷீ சீ கூன்னுடன் நடைபெற்ற ‘செயற்கை நுண்ணறிவு யுகத்தில் மனித ஆற்றலை வெளிக்கொணர்தல்’ என்ற தலைப்பிலான கலந்துரையாடலில் சூ உரையாற்றினார்.

செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் வேலைகளைப் பறிக்குமா என்பதை இப்போதே உறுதியாகக் கூறிவிட முடியாது என்றும் இந்தத் தொழில்நுட்பத்தின் ஆரம்பக் கட்டத்தில்தான் இருக்கிறோம் என்றும் திரு சியூ குறிப்பிட்டார.

மேலும், மனித சமுதாயம் செணற்கை நுண்ணறிவின் முழுமையான தாக்கத்தை இன்னமும் தெளிவாகப் புரிந்துகொள்ளவில்லை என்றார் அவர்.

வர்த்தக நிறுவனங்கள் செலவுகளைக் குறைத்து உற்பத்தியைப் பெருக்க முனையும் சூழலில், வேலை இழப்புகள் குறித்த கவலைகள் அதிகரித்து வருகின்றன. இருப்பினும், அனைத்து முடிவுகளையும் முழுமையாக இயந்திரங்களிடமே விட்டுவிடாமல், மனிதர்களும் செயற்கை நுண்ணறிவும் இணைந்து செயல்படும் பணிச்சூழல் மீதே தற்போதைய நம்பிக்கை அதிகரித்துள்ளது.

தற்போதைய செயற்கை நுண்ணறிவுப் பிரிவுகளில் உள்ள சில தற்காலிகக் குறைபாடுகளால் முடிவெடுக்கும் திறன் மெதுவாக இருந்தாலும், தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் விதத்தைப் பார்க்கும்போது, மனிதர்கள் அதன் ஆற்றலைக் குறைத்து மதிப்பிடுவதாகத் திரு சியூ எச்சரித்தார்.

குறுகிய காலத்தில் மெதுவாக இருக்கிறது என்பதற்காக, நீண்ட காலத்தில் அது முக்கியத்துவம் பெறாது என்று முடிவெடுப்பது தவறான அணுகுமுறை என்றும் அவர் கூறினார்.