📅 Monday, 21 September 2026 IST | புரட்டாசி 5, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 21, 2026 07:04 PM

சிங்கப்பூர் வர்த்தகங்களுக்கான எதிர்கால வழிகாட்டி

சிங்கப்பூர் வர்த்தகங்களுக்கான எதிர்கால வழிகாட்டி

சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்கள் எதிர்காலத்துக்கு எந்தளவு தயார் நிலையில் உள்ளன என்பதை மதிப்பிட உதவ சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனம் புதிய வழிகாட்டிமுறையை அறிமுகம் செய்துள்ளது.

திறன்களில் உள்ள இடைவெளிகளை அடையாளம் கண்டு உருமாற்ற முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கவும் அந்த வழிகாட்டிமுறை வர்த்தகங்களுக்குக் கைகொடுக்கிறது.

எதிர்காலத்துக்குத் தயாராகும் வர்த்தகங்களுக்கான தளத்தின் ஒரு பகுதியாக ‘ஃபியூச்சர் ரெடி பிசினஸ் இன் ஆக்‌‌ஷன் 2026’ என்ற நிகழ்ச்சி முதன்முறையாக நடத்தப்பட்டது.

வர்த்தகங்களுக்கான வழிகாட்டிமுறையை வர்த்தக, தொழில்துறை மூத்த துணையமைச்சர் லோ யென் லிங் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துவைத்தார்.

போஸ்டன் ஆலோசனைக் குழுமத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட ‘ஃபியூச்சர் ரெடி பிசினஸ் இன்டெக்ஸ்’ வழிகாட்டிமுறை, டிபிஎஸ், என்டர்பிரைஸ் சிங்கப்பூர், ஆர்எஸ்எம் சிங்கப்பூர் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து வெளியிடப்பட்டது.

வர்த்தகங்களுக்கு உதவ அதில் 11 அளவீட்டு முறைகளையும் 39 தரமான அளவீடுகளையும் அந்த வழிகாட்டிமுறை கொண்டுள்ளது.

வர்த்தகச் செயல்பாடுகள், உத்திகள், நிதி நிலைமை, அனைத்துலக வளர்ச்சி, தொழில்நுட்பப் பயன்பாடு, தரவுகளின் கட்டமைப்பு, திறன் மேம்பாடு, சமூக தாக்கம் என ஆறு அம்சங்களில் வழிகாட்டிமுறை முன்வைக்கிறது.

வணிக சமூகம் இதுவரை பெற்றிராத அம்சங்களை இந்த வழிகாட்டிமுறை வழங்குவதாகச் சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கொக் பிங் சூன் கூறினார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

பொருத்தமான திட்டங்கள், பயிற்சிகள், நிதி, நிபுணத்துவ ஆதரவுகளைப் பெற ஆலோசகர்கள் நிறுவனங்களுக்கு வழிகாட்டுவர்.

100க்கும் அதிகமான நிறுவனங்கள், ‘ஃபியூச்சர் ரெடி பிசினஸ் இன்டெக்ஸ்’ குறியீட்டை நிறைவுசெய்துள்ளன என்ற திரு கொக், இவ்வாண்டின் இறுதிக்குள் அதை 200க்கு அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டுக்குள் அந்த எண்ணிக்கையை 500க்கு உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

கூடுதலான நிறுவனங்களின் பயன்பாட்டின் மூலம் ‘ஃபியூச்சர் ரெடி பிசினஸ் இன்டெக்ஸ்’ குறியீட்டை மறுஆய்வு செய்து இன்னும் மேம்படுத்த முடியும் என்றும் திரு கொக் குறிப்பிட்டார்.