📅 Friday, 16 October 2026 IST | புரட்டாசி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 16, 2026 08:04 AM

சிங்கப்பூரில் 12வது நாளாக ஆரோக்கியமற்ற காற்று

சிங்கப்பூரில் 12வது நாளாக ஆரோக்கியமற்ற காற்று

சிங்கப்பூரில் அக்டோபர் மாதம் 5ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து 12 நாள்களாக காற்றின் தரத்தைக் குறிக்கும் பிஎஸ்ஐ குறியீடு ஆரோக்கியமற்ற நிலையில் இருந்துவருகிறது.

கடந்த 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு சிங்கப்பூரில் காற்றின் தரம் இத்தனை நாள்கள் ஆரோக்கியமற்ற நிலையில் இருந்ததில்லை. அந்த ஆண்டு செப்டம்பர் 23லிருந்து அக்டோபர் 7ஆம் தேதி வரை 14 நாள்களுக்குக் காற்றின் தரம் மோசமாக இருந்தது.

சிங்ஸ்டேட் தளத்தில் உள்ள அரசாங்கப் புள்ளிவிவரங்களில், முந்தைய ஆண்டுகளுக்கான 24 மணிநேரத்துக்கான பிஎஸ்ஐ குறியீட்டு விவரங்களைக் கொண்டு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இத்தகவலை அறிந்துகொண்டது.

வெள்ளிக்கிழமை (அக்டோபர் 16) காலை 9 மணி நிலவரப்படி ஒட்டுமொத்தமாக, 24 மணிநேரத்துக்கான பிஎஸ்ஐ குறியீடு 149ஆகப் பதிவானது. மத்தியப் பகுதியில்தான் குறியீடு ஆக மோசமாக 227ஆகப் பதிவானது.