📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil May 27, 2026 10:01 PM

சிங்கப்பூரில் மாபெரும் பிரியாணித் திருவிழா

சிங்கப்பூரில் மாபெரும் பிரியாணித் திருவிழா

சிங்கப்பூரிலுள்ள இந்தியத் தூதரகம் ஷங்ரில்லா ஹோட்டலுடன் இணைந்து நடத்திய மாபெரும் பிரியாணித் திரு விழா மே திங்கள் 11 ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இரண்டாவது முறையாக நடத்தப்படும் இந்த உணவுத் திரு விழா உணவுப் பிரியர்களிடை மிகுந்த வரவேற்பைப் பெற்றது. மே 24 ஆம் தேதி வரை நடைபெற்ற இவ்விழாவில் இந்தியாவின் பல்வேறு வட்டாரங்களைச் சார்ந்த ஏழு தனித்துவமான பிரியாணி வகைகள் பரிமாறப்பட்டன.

ஹைதராபாத் - லக்னோ - திண்டுக்கல் - ஆம்பூர் பகுதிகளின் பாரம்பரிய பிரியாணி வகைகள் இடம் பெற்றன. தலைச்சேரி - டெல்லி - கொல்கத்தா வகைகளும் கிடைக்கப் பெற்றன. ஷங்ரில்லா சிங்கப்பூர் - ஷங்ரில்லா ஈரோஸ் மற்றும் செந்தோசா ஹோட்டல்களின் சடையல் வல்லுநர்கள் பங்கேற்றனர். ஷங்ரில்லா சிங்கப்பூர் பானப் பிரிவு இயக்குநர் மேத்யூ பென்னிக் ஒவ்வொரு வட்டாரத்தின் பிரியாணி வரலாற்றையும் கலாச்சாரத்தையும' சுவைபட விவரித்து சுவைக்கு மணமூட்டினார்.

சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் டாக்டர் ஷில்பக் அம்புலே பேசுகையிவ் சிங்கப்பூர் நண்பர்களுக்காக இரண்டாவது ஆண்டாக நடத்தப்படுவதாகக் குறிப்பிட்டார்.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்