📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema June 22, 2026 09:02 PM

சினிமா பாடலுக்கு நடனம் ஆடியது ஏன்?: அமைச்சர் பதில்

சினிமா பாடலுக்கு நடனம் ஆடியது ஏன்?: அமைச்சர் பதில்

முதல-அமைச்சரின் பிறந்தநாளை குதூகலமாக கொண்டாடினோம். இதுஒரு தப்பா? சினிமா பாடலுக்கு நடமானடியது குறித்த கேள்விக்கு அமைச்சர் விஸ்வநாதன் பதில் அளித்துள்ளார்.

முதல்-அமைச்சர் விஜய் பிறந்தநாள்

மதுரை மாவட்டம் மேலூரில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரது பிறந்தநாளை முன்னிட்டும், 'போதையில்லா மேலூர்' மற்றும் 'பெண்கள் பாதுகாப்பு' ஆகியவற்றை வலியுறுத்தியும் இன்று மாரத்தான் போட்டி நடைபெற்றது. மேலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து தொடங்கிய இந்த மாரத்தான் போட்டி, மொத்தம் 4 பிரிவுகளாக 4 கிலோமீட்டர் தொலைவிற்கு நடைபெற்றது.

பெண்ணுடன் நடனம்

இப்போட்டியைத் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.முன்னதாக, விழா மேடைக்கு அமைச்சர் விஸ்வநாதன் வருகை தந்தபோது, அங்கு விஜய்யின் திரைப்படப் பாடலுக்கு உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்த அமைச்சர், மேடையிலேயே அவர்களோடு இணைந்து அமைச்சர் என்று உணராமல் அவர்களோடு சேர்ந்து உற்சாகமாக நடனமாடினார். அவர் நிகழ்ச்சியில் பெண்ணுடன் நடமனாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், சினிமா பாடலுக்கு நடனம் ஆடியது ஏன்? என அமைச்சர் விஸ்வநாதன் பதில் அளித்துள்ளார்.

இளைஞர்கள் கோரிக்கை