📅 Saturday, 03 October 2026 IST | புரட்டாசி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics June 24, 2026 08:02 PM

"சிறுமிகளுக்கு முதலுதவி செய்ததை இழிவுபடுத்துவதா?"

"சிறுமிகளுக்கு முதலுதவி செய்ததை இழிவுபடுத்துவதா?"

உயர்கல்வி துணை அமைச்சர் விஸ்வநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

மாரத்தானில் பங்கேற்ற சிறுமிகள் வெயிலால் மயக்கமடைந்த நிலையில் அவர்களுக்கு முதலுதவி செய்தேன்.

மனிதாபிமான உணர்வுடன் சிறுமிகளை தொட்டு தூக்கி மயக்கத்தை போக்க தண்ணீர் தெளித்து முதலுதவி செய்ததை இழிவுபடுத்துவதா?

மனிதாபிமான செயலை இழிவுபடுத்தி திமுக ஐடி விங்கில் அன்பில் மகேஷ் பதிவு செய்திருப்பது அநாகரீக செயல்.

அமைச்சராக இருந்தபோது அன்பில் மகேஷ் செய்த ஊழல்கள் தனியார் பள்ளி கூட்டமைப்பின் தலைவர் அளித்த பேட்டியில் உறுதியாகி உள்ளது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குறிப்பாக தலித் சமூகத்தின் பிரதிநிதியாக அமைச்சரவையில் இருக்கும் என்னை நோக்கி அவதூறு செய்யப்படுகிறது.

அநாகரீகமான விமர்சனங்கள் மூலம் அன்பில் மகேஷ் அவரது தரத்தை தான் குறைத்துக் கொண்டுள்ளார்.

விமர்சனங்கள் மூலம் என்றும் எங்களை வெல்ல முடியாது என உறுதியாக கூறுகிறேன்.

இதுபோன்ற தரம்தாழ்ந்த விமர்சனங்களை முன்வைத்தால் அதற்குரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.