📅 Saturday, 03 October 2026 IST | புரட்டாசி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema July 27, 2026 06:33 PM

சிவகங்கை: 100

சிவகங்கை: 100

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூரில் பஸ் நிலையம் அருகே கல்லூரி மாணவி ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு செல்போனில் பேசுவது போன்று வாலிபர் ஒருவர் வந்தார். அவர் அந்த மாணவி அருகே நின்று அவரை வேறொரு கேமராவில் ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளார். இதனை அறிந்த மற்றொரு மாணவி இதுகுறித்து பள்ளத்தூர் போலீசுக்கு தகவல் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று அந்த வாலிபரை பிடித்து அவரிடம் இருந்து 2 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் ஆய்வு செய்தபோது அவற்றில் 60 இளம் பெண்களின் ஆபாச படங்கள் இருந்ததும், அவர் கானாடுகாத் தானை சேர்ந்த செந்தில்குமார் (வயது 42) என்பதும் தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், காரைக்குடியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இவர், தினமும் கல்லூரி, பள்ளிக்கூடங்கள், ஆஸ்பத்திரிகள் போன்ற இடங்களுக்கு சென்று பெண்களை இதுபோன்ற ஆபாச படங்கள், வீடியோ எடுத்து ரசிப்பதையே வழக்கமாக கொண்டிருக்கிறார். இவ்வாறு 100-கும் மேற்பட்ட பெண்களை படம் பிடித்துள்ளார். இவரது செயலை அறிந்த அவருடைய மனைவி கண்டித்தும் செந்தில்குமார் கேட்காததால், அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் செந்தில்குமைார விட்டு பிரிந்து தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார், என்று தெரிவித்தனர்.