சகல வசதிகளுடன் விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா?
சகல வசதிகளுடன் விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா?
Google News Tamil Sportsமந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பத்தில், விளையாட்டு மைதானம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
மந்தாரக்குப்பம் மற்றும் அதை சுற்றியுள்ள ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள கல்லுாரி பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தடகளம், கிரிக்கெட், பூப்பந்து, டென்னிஸ், வாலிபால் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர்.
மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் பல்வேறு மாணவர்கள் பங்கேற்று சாதனை புரிந்து வருகின்றனர்.
இப்பகுதிகளில் சகல வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானங்கள் இல்லாததால் இளைஞர்கள் தகுந்த பயிற்சியை மேற்கொள்ள முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இது குறித்து விளையாட்டு ஆர்வலர்கள் கூறியதாவது:
இப்பகுதியில் உள்ள விளையாட்டு மாணவர்களுக்கு நவீன விளையாட்டு மைதானம் தளம் அவசியமாக உள்ளது. மேலும் இளைஞர்களின் திறமைகளை வீணடிக்காமல் ஊக்கப்படுத்த மந்தாரக்குப்பம் பகுதியில் போதிய நிலத்தை தேர்வு செய்து ஓடுதளம் மற்றும் பிற விளையாட்டு உள்கட்டமைப்புகளுடன் கூடிய நவீன வசதிகளுடன் விளையாட்டு மைதானம் அமைப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.