📅 Tuesday, 15 September 2026 IST | ஆவணி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 15, 2026 10:34 PM

சமந்தாவிற்கு பாரம்பரிய முறையில் நடந்த ஆன்மீக வளைகாப்பு.. கையில் வைத்து இருக்கும் ஸ்ரீ யந்திரம்!

சமந்தாவிற்கு பாரம்பரிய முறையில் நடந்த ஆன்மீக வளைகாப்பு.. கையில் வைத்து இருக்கும் ஸ்ரீ யந்திரம்!

சென்னை: நடிகை சமந்தா ரூத் பிரபு, பிரபல பாலிவுட் இயக்குநர் ராஜ் நிதிமோருவை திருமணம் செய்துகொண்டு, தற்போது தனது முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கிறார். தற்போது சமந்தாவிற்கு பாரம்பரிய முறையில் கோத் பராய் மற்றும் ஸ்ரீ வித்யா மரபுப்படி வளைகாப்பு நடைபெற்றது. இந்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

சமந்தாவிற்கு வளைகாப்பு: அதில், நடிகை சமந்தா நமது தொன்மையான கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் நான் எப்போதும் ஆழமாக மதிக்கிறேன். ஒவ்வொரு சடங்கின் முழுமையான அர்த்தம் எனக்கு தெரியாவிட்டாலும், வேத மந்திரங்களின் ஒலி, அதிலிருந்து வெளிப்படும் ஆற்றல் மற்றும் தலைமுறை தலைமுறையாக பின்பற்றப்படும் இந்தத் தொன்மையான முறைகளுக்குப் பின்னால் ஒரு மகத்தான சக்தி இருக்கிறது என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. ஸ்ரீவித்யா உபாசகரான பூசாரி, ஒவ்வொரு சடங்கையும் எனக்கு புரிய வைத்தபோதுதான், அது எவ்வளவு ஆழமானது என்பதை புரிந்து கொண்டேன். ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒரு நோக்கம் இருந்தது, ஒவ்வொரு அர்ப்பணிப்பிற்கும் ஒரு பெரிய அர்த்தம் இருந்தது.

அபிஷேகம்: ஸ்ரீ கல்பம் தாய்மையடையும் பெண்ணின் 7 சக்கரங்கள் வழியாக தேவியின் 94 கலைகளை ஆவாஹனம் செய்யும் சிறப்பு வழிபாடு இது. புனிதம் நிறைந்த தீர்த்தம் மற்றும் மந்திரங்கள் மூலம் தாயின் ஆற்றல் மையங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு, தெய்வத்தின் அருளாள் அவளுக்கு பிரவேசிக்க வழிவகை செய்யும். ஒரு தாயாக உருவெடுக்கும் பெண், இந்த சடங்கின் மூலம் சாட்சாத் ஸ்ரீ தேவியாகவே பார்க்கப்படுகிறாள். குழந்தை பிறப்பதற்கு முன்பே, மந்திர ஒலிகள் மூலம் குழந்தைக்கு நல்ல ஆன்மீக சம்ஸ்காரமும் கிடைக்கும் என சமந்தா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

குவியும் வாழ்த்து: இந்தச் சடங்கை பற்றி எதுவும் தெரியாமல் இருந்தேன். எனக்கு இந்த அழகான ஆன்மீக அனுபவத்தை தந்த எனது அன்பிற்குரிய சில்பா ரெட்டிக்கு எனது மனமார்ந்த நன்றி எனக்குள் வளரும் அந்தச் சிறிய உயிரை நினைத்து நான் பெருமிதமும் என பதிவிட்டுள்ளார்.சமந்தா - ராஜ் நிதிமோரு தம்பதியின் இந்த அழகான புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வர, திரையுலகினரும் ரசிகர்களும் சமந்தாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.