சமந்தாவுக்கு நாத்தனார் மீது இவ்வளவு பாசமா?.. ஒரு நைட் முழுக்க.. ராஜ் நிடிமோரு சகோதரி எமோஷனல்
சென்னை: நாக சைதன்யாவை பிரிந்த சமந்தா; அடுத்ததாக இயக்குநர் ராஜ் நிடிமோருவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இப்போது அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்றும் நேற்றிலிருந்து தகவல்கள் பரவிக்கொண்டிருக்கின்றன. சூழல் இப்படி இருக்க சமந்தாவின் நாத்தனாரும், ராஜ் நிடிமோருவின் சகோதரியுமான ஷீத்தல் போட்டிருக்கும் இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று கவனத்தை ஈர்த்திருக்கிறது.
நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட சமந்தா; சில வருடங்களிலேயே அவரை பிரிந்துவிட்டார். அந்த சமயத்தில் மையோசிடிஸ் நோயும் வந்தது. அதிலிருந்து மீண்ட அவர்; மீண்டும் சில படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடிக்க தொடங்கினார். அந்த சமயத்தில் இயக்குநர் ராஜ் நிடிமோருவும், சமந்தாவும் காதலிக்க தொடங்கினார்கள். அதனையடுத்து கடந்த வருடத்தில் கோவை ஈஷா யோகா மையத்தில் இரண்டு பேரும் திருமணம் செய்துகொண்டார்கள். இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்ப்பமாக இருக்கும் எங்கள் தங்கம் சமந்தா?: திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து நடித்துவரும் சமந்தா, இப்போது எங்கள் தங்கம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். நேற்று முன்தினம் வெளியான அந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இது ஒருபக்கம் இருக்க படம் சக்சஸ்ஃபுல்லாகியிருப்பதால்; நேற்று சமந்தா கேக் வெட்டி கொண்டாடினார். அப்போது அவரது வயிறு கொஞ்சம் பூசினாற்போல் இருந்தது. அதை பார்த்த ரசிகர்கள், சாம் கர்ப்பமாக இருக்கிறாரோ என்று கேள்வி எழுப்ப தொடங்கிவிட்டார்கள்.
ஷீத்தலின் பதிவு: இந்நிலையில் ராஜ் நிடிமோருவின் சகோதரி ஷீத்தலின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் போஸ்ட்டில், "சமந்தாவின் திருமணம் முடிந்த சில நாட்களில் ஹைதராபாத்தில் இருக்கும் அவரது வீட்டில்தான் தங்கினேன். ஒருநாள் இரவு எனக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. ஒரே குளிர். வாந்தி, தலை வலி. படுக்கையில் இருந்து எழக்கூட முடியாத நிலையில்தான் இருந்தேன்.
A post shared by Sheetal Nidimoru (@sheetalnidimoru)
சமந்தா வந்தார்: வேறு வழியில்லாமல் குடும்ப வாட்ஸ் ஆப் குரூப்பில் மெசேஜ் செய்தேன். வீட்டில் ஏதேனும் மருந்து இருக்கிறதா? குளிரில் நடுங்குகிறேன். போர்வை எங்கிருக்கிறது என்று கேட்டேன். சில நிமிடங்களில் சமந்தாவிடமிருந்து பதில் வந்தது. நான் வருகிறேன் என்று பதில் சொன்னார். சொன்னபடியே அவர் வந்தார். எனது சகோதரரையோ, வேறு யாரையும் அனுப்பி வைக்கவில்லை.
அவர் அப்படி செய்தார்: போர்வைகள் எங்கே இருக்கிறது என்பதை அவர் வந்த பிறகும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் பெரிய பெரிய துண்டுகளை எடுத்து வந்து என் மீது போர்த்திவிட்டார். அவரே மருந்தும் கொடுத்தார். அன்று இரவு முழுவதும் சமந்தா தூங்கவே இல்லை. திருமணம் நடந்த புதிது. விடிந்தால் ஷூட்டிங். இருந்தாலும் அவர் அப்படி செய்தார். மறுநாள் அவரது ஷூட்டிங்கிற்கு சென்றேன். சேலை கட்டியபடி அவர் நடித்துக்கொண்டிருந்தார். அவர் முகத்தில் சிரிப்பு, வேலையில் கவனம் அவ்வளவு இருந்தது. இரவு முழுவதும் தூங்கியது மாதிரி வேலைகளை செய்துகொண்டிருந்தார்.
அதைத்தான் அவர் கேட்டார்: அவர் என்னை பார்த்ததும், உடல் எப்படி இருக்கிறது என்றுதான் கேட்டார். அவரது முகத்தில் இருந்த அக்கறை இன்னும் நினைவிருக்கிறது. அவரைப் பார்த்து எனக்கு வியப்பாக இருந்தது. இரவு தூங்காமல் இருந்துவிட்டு எப்படி இப்படி நடிக்க முடிகிறது என வியந்தேன். அந்தக் காட்சிகளை பார்க்கும்போது அவரது முகத்தில் சோர்வே தெரியாது. அவர் தூங்கவில்லை என்பதும் யாருக்கும் தெரியாது" என குறிப்பிட்டிருக்கிறார்.