📅 Saturday, 17 October 2026 IST | புரட்டாசி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business October 17, 2026 06:01 PM

சந்திரகலா பற்றி சாமுண்டீஸ்வரிக்கு தெரியவந்த உண்மை..அம்பலப்படுத்திய கார்த்திக்.. கார்த்திகை தீபம்

சந்திரகலா பற்றி சாமுண்டீஸ்வரிக்கு தெரியவந்த உண்மை..அம்பலப்படுத்திய கார்த்திக்.. கார்த்திகை தீபம்

சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில் கார்த்திக்கின் திட்டத்தின்படி மயில்வாகனம் டாக்டர் வேடத்தில் சென்று சிவனாண்டியை சந்திக்கிறார். அப்போது சிவனாண்டி, தான் பணத்தை கொடுத்துவிடுவதாகவும், அதற்கு பதிலாக அந்த செயினை மட்டும் தன்னிடம் கொடுத்துவிட வேண்டும் என்கிறார். இதையடுத்து கார்த்திக், டாக்டர் வேடத்தில் இருக்கும் மயில்வாகனத்தின் மூலம் சிவனாண்டியிடம் இருந்து ஐந்து லட்சம் ரூபாய் பணத்தை வாங்குகிறார்.

கார்த்திகை தீபம்: பணத்தை வாங்கியதும், தனக்கு இவ்வளவு பெரிய தொகையை கொடுத்த சிவனாண்டிக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று மயில்வாகனம் சொல்ல, அதற்கு சிவனாண்டி, கற்பகத்தை கொலை செய்த விஷயத்தில் தன்னுடைய பெயர் எந்த இடத்திலும் வரக்கூடாது என்றும், அந்த கொலையை செய்தது கார்த்தி என்பதுபோல ரிப்போர்ட்டை மாற்றி எழுத வேண்டும் என்கிறார். மயில்வாகனம், எதற்காக இப்படியெல்லாம் செய்தீங்க என முழுமையான உண்மை தனக்கு தெரிந்தால்தான் தன்னால் அதற்கு உதவ முடியும் என்கிறார்.

ரகசிய கேமிரா: உடனே முத்துவேல், கற்பகத்தை கொலை செய்தற்கான காரணத்தை சொல்கிறார். இதை மயில்வாகனம், தனது பாக்கெட்டில் வைத்திருக்கும் கேமரா மூலம் ரகசியமாக வீடியோவாக பதிவு செய்கிறார். இதையெல்லாத்தையும் கார்த்திக்கும் சாமுண்டேஸ்வரியும் மறைந்திருந்து கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். பின் சிவனாண்டி அங்கிருந்து சென்று விட, சாமுண்டேஸ்வரியிடம் நடந்த உண்மைகளை பற்றி பேசுகிறார்கள். அப்போது கார்த்திக், கற்பகத்தை கொலை செய்தது சிவனாண்டிதான் என்றும் சாமுண்டேஸ்வரியிடம் தெளிவுபடுத்துகிறார். அதுமட்டுமின்றி, கற்பகத்தின் கொலைக்கு தங்களை காரணமாக்கி பழியை தங்கள் மீது சுமத்தியிருக்கிறார்கள் என்கிறார்.

துரோகம் : இதையடுத்து மயில்வாகனம் போனில் சிவனாண்டியும் முத்துவேலும் பேசிய அனைத்து விஷயங்களையும் சாமுண்டேஸ்வரிக்கு போட்டு காட்டுகிறார்கள். அதோடு, சிவனாண்டியிடம் இருக்கும் வாங்கிய ஐந்து லட்சம் ரூபாய் பணமும் உங்க வீட்டில் இருந்து எடுத்தது தான் என்கிறார். மேலும், ரேவதி எடுத்த வீடியோவை கார்த்திக் சாமுண்டேஸ்வரியிடம் காட்டுகிறார். அந்த வீடியோவில் சந்திரகலா, சிவனாண்டியிடம் பணத்தை கொடுப்பது பதிவாகியிருக்கிறது. இதைப் பார்த்த சாமுண்டேஸ்வரி அதிர்ச்சியில் உறைந்து போகிறார். தன்னுடைய சொந்தத் தங்கையான சந்திரகலாவே இப்படிப்பட்ட காரியங்களை செய்திருக்கிறாளா என்றும், தன்னுடன் கூடவே இருந்து தனக்குத் துரோகம் செய்துவிட்டாளே என்றும் வேதனையுடன் நினைக்கிறார். இதன் மூலம், கற்பகத்தின் கொலை முதல் குடும்பத்தில் தொடர்ந்து நடக்கும் பல பிரச்சனைகள் வரை அனைத்திற்கும் பின்னணியில் சந்திரகலா இருப்பது சாமுண்டேஸ்வரிக்குத தெரிய வருகிறது.