📅 Sunday, 18 October 2026 IST | ஐப்பசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 17, 2026 11:03 PM

தொடர் விடுமுறை: சென்டிரல், எழும்பூர், தாம்பரம் ரெயில் நிலையங்களில் அலைமோதிய கூட்டம்

தொடர் விடுமுறை: சென்டிரல், எழும்பூர், தாம்பரம் ரெயில் நிலையங்களில் அலைமோதிய கூட்டம்

ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இன்று வெள்ளிக்கிழமை. நாளை சனிக்கிழமை விடுமுறை, ஞாயிறு வழக்கம்போல் விடுமுறை. திங்கட்கிழமை ஆயுதபூஜை, செவ்வாய்க்கிழமை விஜய தசமி. இரண்டு நாட்கள் அரசு விடுமுறை. நான்கு நாட்கள் விடுமுறை வருவதால் மேற்கொண்டு விடுமுறை எடுக்காமல், சென்னையில் வசிக்கிம் வெளியூர் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டு வருகின்றனர்.

சென்னை சென்டிரல், எழும்பூர் மற்றும் தாம்பரம் ரெயில் நிலையங்கள்

இதனால் சென்னை சென்டிரல், எழும்பூர் மற்றும் தாம்பரம் ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. முன்பதிவு செய்யாதோர், முன்பதிவு இல்லாத பெட்டிகளில் மூலம் செல்ல முயற்சி செய்வதால் பிளாட்பாரங்கள் பயணிகளால் நிரம்பி வழிந்தன.

சிறப்பு பேருந்துகள்

அதேபோல் சென்னை கிளாம்பாக்கத்திலும் பயணிகள் அதிக அளவில் காணப்பட்டனர். தமிழக அரசு சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்கள் சொந்த ஊருக்கு செல்ல, ஏராளமான சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது.

இதற்கிடையே மாலை 6 மணியில் இருந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் கனமழை பெய்ததால் திருச்சி செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் ஊர்ந்த வண்ணம் செல்கின்றன.

சிலர் வெள்ளிக்கிழமை (இன்று) ஒருநாள் விடுமுறை எடுத்துக் கொண்டே நேற்றைய தினமே சொந்த ஊர் கிளம்பிவிட்டனர். சனிக்கிழமை விடுமுறை எடுக்க முடியாதவர்கள் நாளை வேலைப்பார்த்து, மாலைக்குப்பின் புறப்படுவார்கள்.