சந்திரகலாவை கடத்திய கார்த்திக்.. சிவனாண்டிக்கு விழுந்த போலீஸ் அடி.. கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திகை தீபம் சீரியல் நேற்றைய எபிசோடில், கற்பகத்தை கொன்றது நான் தான் கணவர் மீது தேவையில்லாமல் விழுந்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில், நான் தான் கற்பகத்தை கொன்றேன். என்னுடைய பேரன் கொல்லவில்லை என்று சொல்லி பரமேஸ்வரி பாட்டி போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகிறார். இதனால் போலீசார் பரமேஸ்வரி பாட்டியை கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள்.
இந்த விஷயத்தை கேள்விப்பட்ட சிவனாண்டி உடனே சந்திரக்கலாவுக்கு போன் செய்து, இந்த கிழவி என்ன பண்ணிச்சு தெரியுமா? நான்தான் கொலை பண்ணேன் என்று சொல்லிட்டு போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகிட்டாங்க. இதனால் கார்த்திக் வெளியே வந்துட்டான் என்று சொல்கிறார். இதை கேட்டு சந்திரக்கலா அதிர்ச்சி அடைகிறார். இந்த விஷயத்தை சந்திரக்கலா சாமுண்டேஸ்வரியிடம் சொல்ல, ராஜராஜன் இந்த வயதில் பாட்டி போய் ஜெயிலில் இருக்கிறார்களா? என்று வருத்தப்படுகிறார். அனைவரும் பரமேஸ்வரி பாட்டியை பார்க்க செல்கின்றனர். அப்போது பரமேஸ்வரி பாட்டி, வேற என்ன பண்ணுறது? நம்ம குடும்பத்தின் மீது இருக்கும் பழியை துடைக்கணும். கும்பாபிஷேகம் நல்லபடியாக நடக்கணும். அதுக்காகத்தான் நான் ஜெயிலில் இருக்கேன். நிச்சயமாக என்னுடைய பேரன் என்னை காப்பாற்றுவான் என்று சொல்கிறார்.
கார்த்திகை தீபம்: மறுபக்கம், கார்த்திக்கை சந்திப்பதற்காக ரேவதி, மயில்வாகனம் உள்ளிட்ட அனைவரும் செல்கிறார்கள். அப்போது கார்த்திக் மிகவும் வருத்தப்பட்டு உட்கார்ந்திருக்கிறார். அதன்பிறகு கார்த்திக், மயில்வாகனம் சேர்ந்து ஒரு திட்டம் போடுகிறார்கள். அந்தத் திட்டத்தின்படி சந்திரக்கலாவை கடத்துகிறார்கள். சந்திரக்கலாவை கடத்தி ஒரு இடத்தில் அடைத்து வைக்கிறார்கள். ஆனால், சந்திரக்கலாவை கடத்தியது சிவனாண்டி என்று சாமுண்டேஸ்வரிக்கு தெரியவருகிறது. இதனால், சாமுண்டேஸ்வரி சிவனாண்டி மீது போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கிறார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்துகிறார்கள்.
மாஸ்டர் பிளான்: ஆனால், சந்திரகலாவை உண்மையில் கடத்தியது கார்த்திக் என்பது தெரியவருகிறது. கார்த்திக் சந்திரக்கலாவிடம், நீ எல்லா உண்மையையும் சொல்லிட்டேன்னா உன்னுடைய புருஷன் வெளியே வரமே முடியாது என சொல்லி சிவனாண்டி போலீசாரிடம் அடி வாங்கும் வீடியோ காட்டுகிறார். இதையெல்லாம் பார்த்த சந்திரக்கலா அதிர்ச்சி அடைகிறார். அதுமட்டுமல்லாமல், கார்த்திக்கும் மயில்வாகனமும் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று சிவனாண்டியை சந்தித்து, ஒழுங்காக எல்லா உண்மையையும் சொல்லிடுங்க. அப்படி சொன்னீங்கன்னா நீங்க இங்கிருந்து தப்பிக்கலாம். அதேபோல சந்திரக்கலாவும் உயிரோட தப்பிப்பா. இல்லன்னா ரெண்டு பேருமே செத்துருவீங்க என்று மிரட்டுகிறார். இப்படி கார்த்திக், மயில்வாகனம் போட்ட திட்டத்தால் சந்திரக்கலா கடத்தப்படுவதும், சிவனாண்டி போலீசில் சிக்குவதுமாக கதை தற்போது பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.