‘சோபா செட் இல்லை, லாக்கரே வந்தாலும் தே.மு.தி.க. தன் நிலையில் இருந்து மாறாது’
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்ற தே.மு.தி.க. பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“தேர்தல் முடிந்த பிறகு சில கட்சியினர் தங்கள் கொள்கையை கூட மாற்றிக் கொண்டு த.வெ.க.வில் சென்று சேர்ந்துவிட்டார்கள். தே.மு.தி.க.வுக்கு அழைப்பு வராமல் இல்லை. இன்றைய முதல்-அமைச்சரே அழைத்தார். ஆனால், ஒரு முடிவை நாம் எடுத்துவிட்டால், அந்த கொள்கை முடிவில் எப்போதும் நாம் உறுதியாக இருப்போம். அதற்கு இதுதான் சான்று.
சோபா செட் இல்லை, பீரோ இல்லை, லாக்கரே வந்தாலும் தே.மு.தி.க. தன் நிலையில் இருந்து மாறாது. ஏனென்றால் நமக்கு கொள்கை முக்கியம். ஒரு கூட்டணியில் இருந்து வெற்றி பெற்றுவிட்டு, தேர்தல் முடிவுகள் வந்த பிறகு கூட்டணியை மாற்றிக் கொள்ளும் நிலைப்பாடு தே.மு.தி.க.வுக்கு என்றும் கிடையாது.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.