சரிவை நோக்கி நகர்கிறதா 'வங்காளப் புலி' மம்தாவின் இரும்புக்கோட்டை?
இந்திய அரசியலின் தற்போதைய மிக உற்றுநோக்கப்படும் 'ஹாட் டாபிக்' எதுவென்றால், அது மேற்கு வங்க மாநிலத்தில் அரங்கேறி வரும் அதிரடி அரசியல் திருப்பங்கள்தான் என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்க முடியாது.
அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அம்மாநில ஆளுங்கட்சியான அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் யாரும் எதிர்பார்க்காத ஒரு மாபெரும் உள்கட்சிப் பிளவு வெடித்துள்ளது. தங்கள் ரத்தமும் சதையுமா வளர்த்து எடுத்த கட்சியின் சுப்ரீம் லீடர் மம்தா பானர்ஜிக்கு எதிராகவே, அவரது சொந்தக் கட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் தற்போது பகிரங்கமாகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
யாராலும் அசைக்க முடியாது என்று கருதப்பட்ட 'வங்காளப் புலி' மம்தாவுக்கே இந்த நிலைமையா என்று இந்திய அரசியல் வட்டாரமே வியப்பில் உறைந்துள்ளது.
மக்களால் அன்போடு 'தீதி' (Didi - அக்கா) என்று அழைக்கப்படும் மம்தா பானர்ஜியின் அரசியல் பயணம் எப்படிப்பட்டது? கம்யூனிஸ்டுகளை வீழ்த்த அவர் திரிணாமுல் காங்கிரஸை எவ்வாறு தொடங்கினார்? அவரது சாதனைகள் என்ன? தற்போது வெடித்துள்ள உள்கட்சிப் பூசலின் பின்னணியில் உள்ள பா.ஜ.க-வின் வியூகம் மற்றும் 'இந்தியா' கூட்டணிக்கு ஏற்படப்போகும் தாக்கம் என்ன? என்பது குறித்து இங்கு விரிவாக அலசுவோம்.