📅 Monday, 24 August 2026 IST | ஆவணி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 24, 2026 11:04 AM

சட்டசபையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

சட்டசபையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்படுவதாக முதல்-அமைச்சர் விஜய் அறிவித்தார். அப்போது திமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கோஷங்களை எழுப்பினர். அத்துடன், பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்து திமுக பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி கொடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

ஆனால் சபாநாயகர் திமுகவினருக்கு உடனடியாக பேச வாய்ப்பு மறுத்துவிட்டார். முதல்-அமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டதால், அதுகுறித்து பேச திமுகவினருக்கு அனுமதி அளிக்க முடியாது என தெரிவித்தார். அப்போது திமுகவினர் அனைவரும் எழுந்து நின்று கோஷமிட்டதால், அனைவரும் வெளியே சென்று கோஷமிடுங்கள் என சபாநாயகர் கூறினார்.

இதையடுத்து திமுகவினர் உடனடியாக சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செந்தனர். மேலும், வெளியே செல்லும்போது 'அனுமதி கொடு, அனுமதி கொடு' என கோஷங்களை எழுப்பினர்.