📅 Wednesday, 18 November 2026 IST | கார்த்திகை 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics May 30, 2026 04:30 AM

 சட்டம்

 சட்டம்

சென்னை: ''மேகதாது அணை பிரச்னையை சட்டப்படி அணுகுவோம்; தேவைப்பட்டால் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனைகள் பெறப்படும்,'' என, தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:

கர்நாடகவில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட, விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்ய மட்டுமே, உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

அதை மீறி மேகதாது அணை கட்ட, பூமி பூஜை நடத்துவோம் என, கர்நாடகா நீர்ப்பாசனத் துறை அமைச்சரும், துணை முதல்வருமான சிவகுமார் தெரிவித்துள்ளார்.

மேகதாதுவில் அணை கட்ட, தமிழக முதல்வர் விஜய் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். பிரச்னையை சட்டப்படி அணுகி, மேகதாது அணை கட்டுவதை தடுப்போம்.

பூமி பூஜை நடத்த தடை கோரி, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்வோம். தேவைப்பட்டால், அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனைகள் பெறப்படும்.

இரு மாநிலங்கள் இடையே சட்டம், ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் நோக்கில், அரசியல் காரணங்களுக்காக கர்நாடக துணை முதல்வர் நடந்து கொள்வது கண்டனத்திற்குரியது. தேவையற்ற சர்ச்சைகளை கிளப்புவதை, அவர் நிறுத்தி கொள்ள வேண்டும்.

இரு மாநிலங்களுக்கு இடையிலான பிரச்னைகளை தீர்க்க, நீதிமன்றங்கள் உள்ளன. அதை மீறி தன்னிச்சையாக, பொறுப்பின்றி கர்நாடகா செயல்படுவது கண்டிக்கத்தக்கது. இதை முதல்வர் விஜய் அனுமதிக்க மாட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.