சுதந்திர தினம் 2026: நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் பகிர வாழ்த்து செய்திகள்!
சுதந்திர தினம் 2026: நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் பகிர வாழ்த்து செய்திகள்!
இந்தியா 80வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ள நிலையில், குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர வாழ்த்து செய்திகள் இதோ உங்களுக்காக..
Published : August 15, 2026 at 7:00 AM IST
இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட நாள் ஆகஸ்ட் 15. நமது தேசம் சுதந்திர காற்றை சுவாசிப்பதற்காக தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்த தியாகிகளையும், சுதந்திரப் போராட்ட வீரர்களையும் நன்றியோடு நினைவுகூரும் நாள் இது.
இந்த 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று, இந்தியா தனது 80-வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. இந்த நாளில், டெல்லியிலுள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். மேலும், முப்படைகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்று அணிவகுப்பு நடத்துவார்கள். வளர்ச்சியை நோக்கிய நமது பயணத்தில் நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் கட்டிக்காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். இந்த இனிய நாளில் உங்கள் அன்பிற்குரியவர்களுடன் பகிர்ந்து கொள்ள சில வாழ்த்துகள் இதோ...