📅 Saturday, 15 August 2026 IST | ஆடி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 15, 2026 08:03 AM

சுதந்திர தினத்தையொட்டி சென்னையில் மூவர்ணத்தில் ஜொலித்த முக்கிய கட்டிடங்கள்

சுதந்திர தினத்தையொட்டி சென்னையில் மூவர்ணத்தில் ஜொலித்த முக்கிய கட்டிடங்கள்

புதுடெல்லி,

இந்தியாவின் 80-ம் ஆண்டு சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாடு முழுவதும் சுதந்திர தின விழாவை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் உற்சாகமாக நடைபெற்று வருகின்றன. அரசு அலுவலகங்கள், ரெயில் நிலையங்கள், புராதன கட்டிடங்கள் உள்ளிட்டவை மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்து வருகின்றன.

அந்த வகையில், சென்னையில் உள்ள முக்கிய கட்டிடங்கள் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக சென்னையின் அடையாளமாக திகழும் சென்டிரல் ரெயில் நிலையம், சென்னை மாநகராட்சி கட்டிடமான ரிப்பன் மாளிகை, தலைமைச் செயலக கட்டிடம், எழும்பூர் ரெயில் நிலையம் உள்ளிட்ட கட்டிடங்கள் மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இதனை கண்டுகளித்த பொதுமக்கள் தங்கள் செல்போன்களில் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.