📅 Saturday, 15 August 2026 IST | ஆடி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News July 25, 2026 08:33 AM

சூப் அருந்தி உண்ணாவிரதம் முடித்தார் சோனம்

சூப் அருந்தி உண்ணாவிரதம் முடித்தார் சோனம்

புதுடெல்லி: நீட் தேர்வு முறைகேட்டுக்கு எதிராக சமூக சேவகர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் இருந்தார். இவரது உடல் நிலை மோசமடையும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து, அவரை போலீஸார் கடந்த 18-ம் தேதி மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவரை மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, ஜிதேந்திர சிங் ஆகியோர் சந்தித்துப் பேசினர். அவருக்கு அரசு சார்பில் சில உறுதிமொழிகள் அளிக்கப்பட்டன.

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தியவர்கள், நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்றவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படாது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து 26-வது நாளான நேற்று தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள வாங்சுக் சம்மதித்தார். அவரை மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, ஜிதேந்திர சிங் ஆகியோர் சந்தித்து சூப் வழங்கினர். அதை குடித்து தனது உண்ணாவிரதத்தை வாங்சுக் முடித்தார்.

சூப் அருந்திய பின் அவர் கூறுகையில், ‘பசியும் ருசியானதுதான்” என்றார். உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டபின் வாங்சுக் அளித்த பேட்டியில், “மத்திய அரசின் நடவடிக்கை மகிழ்ச்சி அளிக்கிறது. அதற்காக அரசுக்கு நன்றி. போராட்டம் நடத்தும் மாணவர்கள் அமைதி காக்க வேண்டும். உணர்வுகளை வெளிப்படுத்துவது நியாயமான ஒன்றுதான், ஆனால் வன்முறையை நான் ஆதரிக்க மாட்டேன். மேலும் சமூக விரோத சக்திகள் இதைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை” என்றார்.