📅 Wednesday, 30 September 2026 IST | புரட்டாசி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 30, 2026 02:03 AM

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட எதிர்ப்பு

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட எதிர்ப்பு

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட எதிர்ப்பு - தவெக அரசை கண்டித்து மீனவர்கள் போராட்டம்

சென்னை: சென்னை பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் தவெக அரசின் முடிவைக் கண்டித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் விளையாட்டு மைதானத்தில் எண்ணூர் முதல் கோவளம் வரை உள்ள அனைத்து மீனவ கிராம மக்கள் சேர்ந்து கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், தவெக அரசு தனது ஆணவப்போக்கை கைவிட்டு உடனடியாக அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர். பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து, கருப்பு கொடி ஏந்தி மீனவர்கள் பேரணியும் சென்றனர். இதன் போது பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலகம் தொடர்பான அரசாணையை ரத்து செய்ய கோரி முழக்கங்களை எழுப்பினர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் பேசுகையில் எங்கள குழிதோண்டி புதைச்சுட்டு இந்த நிலத்தை எடுத்துக்கோங்க.. சாகுற வரைக்கும் நாங்க இங்க தான் இருப்போம் என ஆவேசமுடன் கூறினர். மீனவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளதை அடுத்து சென்னை பட்டினப்பாக்கத்தில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.