Religion
July 30, 2026 11:33 PM
சூரியன்
மேஷ ராசி பிறந்தவர்களுக்கு, ஐந்தாம் வீடான சிம்ம ராசியில் இருக்கும் சுக்கிரன், நான்காம் வீட்டில் சூரியனும் சஞ்சாரம் செய்கின்றனர். கல்வி தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகள் ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுவார்கள். நீங்கள் எதிர்காலத்தில் நன்மை தரக்கூடிய முதலீடு தொடர்பான விஷயங்களில் அக்கறை காட்டுவீர்கள். போட்டி தேர்வுக்கு தயாராக கூடிய மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். இந்த காலத்தில் கலைத்துறையில் இருப்பவர்களுக்கு தங்களுடைய திறமையை வெளிப்படுத்தக்கூடிய நல்ல வாய்ப்புகள் அமையும்.மேஷ ராசி அன்பர்களுக்கு சுப பலன்கள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், உங்கள் முயற்சிகளை அதிகரிக்கவும். உணர்ச்சிவசப்பட்டு இந்த முதலிடம் செய்ய வேண்டாம். தினமும் சூரியன் மற்றும் சுக்கிர வழிபாடு செய்வது அவசியம்.