📅 Monday, 28 September 2026 IST | புரட்டாசி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 28, 2026 06:00 PM

சூரியனை பின்பற்றும் விசில் கட்சி...இடைத்தேர்லுக்காக விஜய் கையில் எடுத்த முக்கிய ஆயுதம்?

சூரியனை பின்பற்றும் விசில் கட்சி...இடைத்தேர்லுக்காக விஜய் கையில் எடுத்த முக்கிய ஆயுதம்?

சூரியனை பின்பற்றும் விசில் கட்சி...இடைத்தேர்லுக்காக விஜய் கையில் எடுத்த முக்கிய ஆயுதம்?

அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கான பிரசாரத்தில் ஆளும் தரப்பு இறங்கியுள்ள நிலையில்,சூரியனின் பாணியை பின்பற்றுவதாக கோட்டை வட்டாரங்களில் இன்றைய ஹாட் டாபிக்காக இருந்து வருகிறது.

2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தலில் தவெக, திமுக, அதிமுக , நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்ட நிலையில், இதில் புதிதாக தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் அனைத்து கட்சிகளையும் மண்ணை கவ்வவைத்து வெற்றி வாகையை சூடியது.

இந்த வெற்றியின் மூலம் விசில் கட்சி தலைவர் மே 10 அன்று முதலமைச்சராக பொறுப்பேற்று தற்போது ஆட்சியை நடத்தி வருகின்றனர்.

இங்கதாங்க ட்விஸ்ட்டே இருக்கு. புதிய கட்சி வெற்றி வாகையை சூடியிருந்தாலும், இந்த வெற்றி இலைக் கட்சிக்கு மிகவும் ஒரு பின்னடைவாக அமைந்தது. தேர்தலில் இலைக்கட்சி தோல்வியுற்றதால், கட்சியின் பொதுச்செயலாளர் மீது உறுப்பினர்களின் கோபம் திரும்ப ஆரம்பித்தது.

இந்த தோல்வி கட்சியின் தலைமை சரியில்லததால் தான் நமக்கு ஏற்பட்டது என்று அனைவரும் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. உடனே இலைக்கட்சியில் உள்ளவர்கள் அனைவரும் ஒரு முடிவை எடுத்தனர். அந்த முடிவு தலைமைக்கு எதிராக திரும்பும் என்று அவரே நினைத்திருக்க மாட்டார்.

என்னவென்றால் அனைவரும் புதிதாக தொடங்கிய விசில் கட்சியிடம் படையெடுக்க ஆரம்பித்தனர். இலைக்கட்சியின் மூலம் வெற்றி பெற்று எம்எல்ஏ பதவி கிடைத்திருந்தாலும் அந்த பதிவை துக்கி எறிந்து விட்டு விசில் கட்சியிடம் தஞ்சப்புக ஆரம்பித்தனர். இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.

விசில் கட்சியிடம் தஞ்சப்புகுந்ததால் மதுராந்தம் தாராபுரம் தொகுதிக்கு எம்எல்ஏ யாரும் இல்லாமல் மக்கள் அனைவரும் தவித்து வந்த நிலையில், தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் குறித்து அறிவிப்பை வெளியிட்டது.

வருகிற அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் எப்படியாவது இதில் வெற்றி பெற்று பெரும்பான்மையை பெற்றுவிட வேண்டும் என்று ஆளுந்தரப்பு துடிதுடியாய் துடித்துக்கொண்டு இருக்கிறது.

தேர்தலுக்கான பிரச்சாரத்தில் தீவிரமாக களமிறங்கியுள்ள சூரியன் கட்சி மற்றும் இலைக்கட்சி இரு கட்சிகளையும் மிஞ்சும் அளவிற்கு எப்படியாது இதில் வெற்றி வாகையை சூடவேண்டும் என்று விசில் கட்சி ஒரு புதிய யுக்தியை கையில் எடுத்திருப்பதாக கோட்டை வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

என்னவென்றால்,"2024 மக்களவைத் தேர்தலில் தி.மு.க கையாண்ட தேர்தல் யுக்தியை, தற்போதைய இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி தரப்பு கையில் எடுத்திருக்கிறதாமே?"

"உண்மைதான். 2024 மக்களவைத் தேர்தலின் போது 'பாஜக-அதிமுக கள்ளக்கூட்டணி என்ற முழக்கத்தை கையில் எடுத்து அபார வெற்றியை பெற்றது திமுக .அதே பாணியில் 'திமுக பாஜக கள்ளக்கூட்டணி' என்ற நரேட்டிவ்வை மீண்டும் அழுத்தமாக செட் செய்து, இடைத்தேர்தலில் திராவிடக் கட்சிகளுக்கே தண்ணீர் காட்ட முயற்சிக்கிறதாம் ஆளுந்தரப்பு.

ஆனால் இது ஓர்க் அவுட் ஆகுமா? என்று சந்தேகம் விசில் தரப்புக்கும் இருக்கும்போல. அதனால்தான் தங்கள் ஆட்சியின் சாதனைகளையும் தேடிப் பிடித்து பிரசாரம் செய்ய திட்டமிட்டிருக்கிறார்களாம்.

முதற்கட்டமாக தொழில் முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்கு சென்றுவிட்டன என்ற குற்றச்சாட்டுகளை மழுங்கடிக்கச் செய்யும் விதமாக நடப்பு நிதியாண்டுக்கான முதல் காலாண்டில் ரூ.57ஆயிரம் கோடிக்கு அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்து முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளதை பிரசாரமாக்கியுள்ளது ஆளுந்தரப்பு.

இத்தனை திட்டங்களும் ஆளுந்தரப்புக்கு கைகொடுக்குமா? இவர்களின் திட்டம் பலிக்குமா? என்பதை பொறுந்திருந்து பார்போம்.