சவுதி விமான நிலையத்தின் மீது மீண்டும் தாக்குதல்; விமான சேவைகள் தற்காலிக நிறுத்தம்
ரியாத்: சவுதி அரேபியாவின் ரியாத் சர்வதேச விமான நிலையம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில், ஒரு அமெரிக்கர் உட்பட 12 பேர் உயிரிழந்தனர்.
சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். இந்த தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டதாகவும், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை சவுதி அரேபியாவின் விமான போக்குவரத்து கழகமும் உறுதிப்படுத்தி உள்ளது.
உடனடியாக பாதுகாப்பு கருதி, விமான நிலையத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். சவுதி அரேபியா மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு பாலஸ்தீனம், எகிப்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. சமீபத்தில் நடந்த இதேபோன்ற தாக்குதலில் சவுதி விமானி உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர்.