📅 Sunday, 20 September 2026 IST | புரட்டாசி 4, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sri Lanka September 20, 2026 10:00 AM

சவுதியில் தமிழ் இளைஞருக்கு மரண தண்டனை பிரதமர் மோடி தலையீட்டை இலங்கை அரசு கோர வேண்டும்: எம்பி வலியுறுத்தல்

சவுதியில் தமிழ் இளைஞருக்கு மரண தண்டனை பிரதமர் மோடி தலையீட்டை இலங்கை அரசு கோர வேண்டும்: எம்பி வலியுறுத்தல்

சவுதியில் தமிழ் இளைஞருக்கு மரண தண்டனை பிரதமர் மோடி தலையீட்டை இலங்கை அரசு கோர வேண்டும்: எம்பி வலியுறுத்தல்

கொழும்பு: இலங்கையின் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சிறுபான்மைத் தமிழ் இளைஞரான அனோஜன் சிவராசா. கல்முனையில் உள்ள நாற்பிட்டிமுனையை சேர்ந்த இவர் வேலைக்காக கடந்த 9 மாதங்களுக்கு முன் சவுதி அரேபியா சென்றார். இந்நிலையில் மதத்தை அவமதிக்கும் வகையிலான சமூக ஊடகப் பதிவு ஒன்றிற்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளதாக சம்பந்தப்பட்ட இளைஞரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

எனினும் மரண தண்டனையை இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இது குறித்து இலங்கை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான மனோ கணேசன் தனது எக்ஸ் தள பதிவில்,\\”அதிபர் அனுர குமார திசநாயக அவர்களே, ஸ்ரீலங்கா ரத்னா விருது பெற்றவரும் உங்கள் நண்பருமான பிரதமர் நரேந்திர மோடியின் அவசர கவனத்துக்கு அனோஜன் சிவராசாவின் இக்கட்டான நிலையை கொண்டு செல்லுமாறு கேட்டுகொள்கிறேன்.

சவுதி பிரதமர் மற்றும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் பிரதமர் மோடிக்கு உள்ள நெருங்கிய உறவை கருத்தில்கொண்டு அனோஜனுக்காக மனிதாபிமான அடிப்படையில் ஒரு தீர்வை பெற்றுத்தர கோருமாறு வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.