📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 26, 2026 03:33 AM

CJP Protest: கோரிக்கைகளை ஏற்பதாக அரசு உறுதி!

CJP Protest: கோரிக்கைகளை ஏற்பதாக அரசு உறுதி!

CJP Protest: கோரிக்கைகளை ஏற்பதாக அரசு உறுதி! - போராட்டத்தை வாபஸ் பெற்ற காக்ரோச் ஜனதா கட்சி

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆதரவாளர்களையும் மாணவர்களையும் அமைதியான முறையில் தங்களது வீடுகளுக்குத் திரும்புமாறு சி.ஜே.பி கேட்டுக்கொண்டுள்ளது.

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வந்த போராட்டத்தைக் காக்ரோச் ஜனதா கட்சி வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது.

மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோருடன் இணைந்து, சி.ஜே.பி செய்தித் தொடர்பாளர்கள் சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரான்கா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.

தங்களின் முதன்மைக் கோரிக்கையான கல்வி அமைச்சரின் ராஜினாமாவை அரசு நிறைவேற்றியுள்ள நிலையில், மற்ற கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் இந்தப் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் அமைப்பாளர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து போலீஸ் வழக்குகள் மற்றும் எஃப்.ஐ.ஆர்-கள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் எனவும், எதிர்காலத்தில் அவர்கள் மீது எந்தவிதப் பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்கப்படாது எனவும் அரசு உறுதியளித்துள்ளது.

அத்தோடு, நீட் தேர்வு விவகாரத்தால் உயிரிழந்த மாணவர்கள் மற்றும் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும் என அரசு தரப்பிலிருந்து உறுதியளிக்கப்பட்டிருக்கிறது.