📅 Saturday, 03 October 2026 IST | புரட்டாசி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema June 23, 2026 09:02 AM

CM Vijay:ஃபயர் விடுவாரா? சட்டப்பேரவை நேரலையில் CM விஜய் இன்று பதிலுரை

CM Vijay:ஃபயர் விடுவாரா? சட்டப்பேரவை நேரலையில் CM விஜய் இன்று பதிலுரை

CM Vijay:ஃபயர் விடுவாரா? சட்டப்பேரவை நேரலையில் CM விஜய் இன்று பதிலுரை - உதயநிதி, EPS-க்கு பதில் வருமா?

CM Vijay TN Assembly Live: தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் நிகழ்த்திய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் முதலமைச்சர் விஜய் இன்று பதிலளிக்கவுள்ளார்.

CM Vijay TN Assembly Live: சட்டப்பேரவை நேரலையில் முதலமைச்சர் விஜயின் பதிலுரை எப்படி இருக்கும்? என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை கடைசி நாள்:

முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டம் கடந்த வியாழக்கிழமை அன்று, ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தின் முடிவில் 3 நாட்கள் கூட்டத்தொடர் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, வெள்ளிக்கிழமை அன்று காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முடிவுக்கு எதிராக முதலமைச்சர் விஜய் தனிதீர்மானம் கொண்டுவந்தார். அதில் புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் சேர்க்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியின் கோரிக்கையையும் முதலமைச்சர் ஏற்ற பிறகு தீர்மானம் ஒர்மனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார். தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது.

அளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்:

முதல் நாள் திமுக மற்றும் தவெக எம்.எல்.ஏக்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, சட்டப்பேரவை களேபரமாக காட்சியளித்தது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையை தொடர்ந்து நேற்று மீண்டும் அவை தொடங்கியதும், புதிய நடுவர் மன்றம் அமைக்கக் கோரியதற்கு அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அந்த முடிவை திரும்பப் பெற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தன. அதேநேரம், திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் ஆலையில் அம்மோனியா வாயு கசிவால் வெளிமாநில ஊழியர்கள் உயிரிழந்தது குறித்து விவாதிக்க வேண்டும் என திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால், அந்த விபத்து குறித்து 110 விதியின் கீழ் அரசு சார்பில் விளக்கம் மட்டுமே அளிக்கப்பட்டது.

கேள்விகளை அடுக்கிய எதிர்க்கட்சிகள்..!

என எதிர்க்கட்சிகள் பல கேள்விகளை அடுக்கி, முதலமைச்சர் அதற்கு பதிலளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படியுங்கள்: TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்கும்? சென்னை? வானிலை அறிக்கை

ஃபயரான ரிப்ளை வருமா?

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான நேரலை வெள்ளிக்கிழமை அன்று துண்டிக்கப்பட்டு இருந்தது. ஆனாலும், நேற்று முழுமையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நேரத்தில் முதலமைச்சர் விஜயை நோக்கி பல்வேறு உறுப்பினர்களும் நேரடியாக கேள்வி எழுப்பினர். ஆனால், அவர் ஒருமுறை கூட பதிலளிக்கவில்லை, சட்ட-ஒழுங்கு தொடர்பாக வாய் திறக்கவில்லை என்பதே எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது. நேரலையில் பார்த்தவர்களும் முதலமைச்சர் பதிலளித்து இருக்க வேண்டாமா? என முணுமுணுத்தனர். இந்நிலையில் தான் எதிர்க்கட்சிகளின் அனைத்து கேள்விகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளிக்கும் வகையில் தனது உரையை விஜய் இன்று நிகழ்த்துவாரா? என பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இன்றுடன் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி