தமிழ்நாட்டின் இளம் அமைச்சரானார் கமலி!
தேர்தலில் 108 இடங்களை பெற்ற தவெக, சில கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்தது. இதையடுத்து தமிழக முதல்-அமைச்சராக விஜய் கடந்த 10-ந்தேதி பதவியேற்றுக் கொண்டார். அவருடன் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடராமன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகிய 9 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். முதல்-அமைச்சர் உள்ளிட்ட 10 அமைச்சர்களுக்கும் கடந்த 16-ந் தேதியன்று துறைகள் ஒதுக்கப்பட்டன.</p> <p class="mb-4 leading-relaxed">தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற்ற நிலையில், தவெகவின் அவினாசி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். கமலி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இவருக்கு கால்நடைத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.</p> <p class="mb-4 leading-relaxed">தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு 28 வயதில் தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் எம்.எல்.ஏ.க்களாக பெரியகுளம் எம்.எல்.ஏ. சபரி ஐயங்கரன் மற்றும் அவினாசி எம்.எல்.ஏ. கமலி ஆகியோர் சாதனை படைத்திருந்தனர்.</p> <p class="mb-4 leading-relaxed">அவினாசி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட மத்திய அமைச்சரும் பாஜக வேட்பாளருமான எல். முருகனை 15,373 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் கமலி. முன்னதாக, மே 10-ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில், சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்ற 29 வயதான கீர்த்தனா அமைச்சராகப் பதவியேற்றார். இவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் அசோகன் ஆகியோரை தோற்கடித்திருந்தார்.</p> <p class="mb-4 leading-relaxed">மேலும், ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்ற 31 வயதான ரமேஷும் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு முக்கியத்துவம் வாய்ந்த அறநிலையத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல், அறந்தாங்கி முகமது ஃபர்வாஸ், தாம்பரம் சரத்குமார், கிணத்துக்கிடவு விக்னேஷ் உள்ளிட்ட இளம் எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.