DC Official Box Office: 50 கோடி வசூல்.. அடித்து விளையாடிய டிசி.. பாக்ஸ் ஆபீஸ் கிங்கான லோகேஷ் கனகராஜ்!
சென்னை: ஹீரோவாக அறிமுகமான படத்தின் மூலம் 50 கோடி வசூலை முதல் வாரத்திலேயே அடித்து விளையாடி நானும் பாக்ஸ் ஆபிஸ் கிங் தான் டா என்பதை நிரூபித்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். விஜய், கமல்ஹாசன், ரஜினிகாந்த் என ஸ்டார் நடிகர்களை இயக்கி பல நூறு கோடி வசூலை பார்த்தாலும், இயக்குநராக 60 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கினாலும், ஹீரோவாக இந்த இமாலய சாதனை தனி ஸ்பெஷல் தான்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி வெளியான டிசி திரைப்படம் 4 நாட்களில் அதிரடியாக 50 கோடி வசூலை பாக்ஸ் ஆபீஸில் கடந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் சற்றுமுன் அதிகாரப்பூர்வ போஸ்டரை வெளியிட்டு ஒட்டுமொத்த கோலிவுட்டையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
உலகளவில் இதுவரை டிசி திரைப்படம் 31 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் டிராக்கர்கள் தெரிவித்து வந்த நிலையில், எல்லா கோட்டையும் அழிங்க, இதுதான் உண்மையான கணக்கு என சன் பிக்சர்ஸ் ஒரே போடாக போட்டுள்ளது.
அதிரடியாக 50 கோடி வசூல்: மாதவன் நடித்த ஜிடி நாயுடு திரைப்படம் 4 நாட்களில் 5 கோடி வசூலை கடக்கவே போராடி வரும் நிலையில், லோகேஷ் கனகராஜின் டிசி திரைப்படம் அதிரடியாக 50 கோடி வசூலை கடந்து மிகப்பெரிய சாதனையை செய்துள்ளது. என்னதான் வரலாற்று படத்தை எடுத்தாலும், ஃபேமிலி டிராமா எடுத்தாலும் மக்கள் தியேட்டர் பக்கம் போகவே ரொம்பவே தயங்குகின்றனர். ஆனால், இதுபோல ஆக்ஷன் டிராமாக்களை அதிலும் ஏ சான்றிதழ் என்றால் உடனடியாக இளைஞர்கள் பட்டாளம் அரங்குகளை உலகளவில் நிறைத்து வருகின்றன.
அனிருத் தான் காரணம்: அருண் மாதேஸ்வரன் இயக்கினாலும் லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் நடித்தாலும் இந்த படத்தின் இமாலய வெற்றிக்கு முழுக்க முழுக்க காரணம் அனிருத்தின் இசை தான் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
100 கோடி வருமா?: 4 நாட்களில் 50 கோடி ரூபாயை டிசி திரைப்படம் அள்ளியதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ள நிலையில், 2வது வாரத்தில் அதிரடியாக 100 கோடி வசூலை கடக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்த வாரம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ், மகுடம் படங்களுக்கு அதிகளவில் தியேட்டர்கள் கிடைக்குமா? சன் பிக்சர்ஸ் தியேட்டர்களை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், விட்டுக் கொடுக்குமா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. எப்படி இருந்தாலும் லோகேஷ் கனகராஜ் இனிமே தொடர்ந்து கோலிவுட்டில் ஹீரோவாக கலக்குவார் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை.