📅 Monday, 10 August 2026 IST | ஆடி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 10, 2026 05:32 AM

DC OTT Release Update: லோகேஷ் கனகராஜின் டிசி.. ஓடிடியில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

DC OTT Release Update: லோகேஷ் கனகராஜின் டிசி.. ஓடிடியில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

சென்னை: இயக்குநராக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிய லோகேஷ் கனகராஜ், தற்போது நடிகராகவும் களமிறங்கியுள்ள 'டிசி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 'லியோ' உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற லோகேஷ், இந்தப் படத்தில் கதையின் நாயகனாக நடித்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்திருந்தது.

இப்படத்தில் பாலிவுட் நடிகை வாமிகா கபி கதாநாயகியாக நடித்துள்ளார். அவருடன் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, அவினாஷ் ரகுதேவன், கஸ்தூரி ராஜா, ஜவஹர் சக்தி, சரத் ரவி, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

கேங்ஸ்டர் கதையில் லோகேஷ்: 'டிசி' படத்தின் கதையைப் பொறுத்தவரை, ஒரு கேங்ஸ்டரின் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக ஏற்படும் திருப்பங்களை மையமாக வைத்து கதை நகர்கிறது. இரக்கமற்ற போலீஸ் அதிகாரி ஒருவரின் துரத்தலுக்கு மத்தியில் தனது வாழ்க்கையை காப்பாற்ற போராடும் நாயகனுக்கு இரண்டு பெண்களின் வருகை மேலும் சிக்கல்களை உருவாக்குகிறது.

குற்றம், காதல், பழிவாங்குதல் என பல்வேறு அம்சங்களை இணைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் லோகேஷ் கனகராஜ் 'தேவதாஸ்' என்ற கதாபாத்திரத்திலும், வாமிகா கபி 'சந்திரா' என்ற கதாபாத்திரத்திலும், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி 'பார்வதி' என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

ஓடிடி உரிமையை கைப்பற்றியது யார்?: திரையரங்குகளில் படம் வெளியாகியுள்ள நிலையில், 'டிசி' திரைப்படத்தின் ஓடிடி உரிமையை சன் நெக்ஸ்ட் நிறுவனமே தக்கவைத்துள்ளது. படத்தின் ஆரம்பக் கிரெடிட்ஸ் காட்சிகளில் இடம்பெற்றுள்ள தகவலின் மூலம் இது தெரியவந்துள்ளது. இருப்பினும், படம் எந்த தேதியில் ஓடிடியில் வெளியாகும் என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.ஆனால் தமிழ் படங்கள் நான்கு வாரங்களில் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகத் தொடங்கிவிடும் என்பதால், டிசி படம் வரும் செப்டம்பர் மாதம், 4ஆம் தேதி ஸ்ட்ரீம் ஆக அதிக வாய்ப்புகள் உள்ளது.

இயக்குநர் என்ற அடையாளத்திலிருந்து நடிகராக மாறியுள்ள லோகேஷ் கனகராஜின் நடிப்பை ரசிகர்கள் எப்படி பார்க்கப் போகிறார்கள் என்பதும் தற்போது கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக, படத்தின் முதல் விமர்சனங்களில் அவரது நடிப்பு குறித்த கருத்துகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. இதனால் 'டிசி' திரைப்படம் திரையரங்குகளைத் தொடர்ந்து ஓடிடியிலும் கவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.