DC Vs GD Naidu Box Office: முதல் நாளில் வசூலில் சொல்லி அடித்தது யாரு?.. ஜிடி நாயுடு vs டிசி ஒப்பீடு!
சென்னை: தமிழ் சினிமாவில் இந்த வாரம் வெளியான பெரிய படங்கள் என்றால் அது லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள டிசி மற்றும் மாதவன் ஜிடி நாயுடுவாக நடித்த ஜிடி நாயுடு உள்ளிட்ட திரைப்படங்கள் தான்.
ராக்கெட்ரி திரைப்படம் தேசிய விருதுகளை எல்லாம் வென்ற நிலையில், ஜிடி நாயுடு பயோபிக் திரைப்படமும் மாதவனுக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல் நாள் வசூலில் ஜிடி நாயுடு படத்தை விட ஆக்ஷன் படமான டிசி படத்துக்கே தமிழ் சினிமா ரசிகர்கள் அதிக வரவேற்பை அளித்துள்ளனர் என்பது பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட்டுகளை பார்த்தாலே தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
மாதவன் நடிப்பில் வெளியான ஜிடி நாயுடு மற்றும் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் வெளியான டிசி உள்ளிட்ட படங்கள் முதல் நாளில் எந்தளவுக்கு வசூல் ஈட்டின. முதல் வாரம் எந்தளவுக்கு வசூல் செல்லும் என்கிற தகவல்களை இங்கே பார்க்கலாம் வாங்க..
ஜிடி நாயுடு முதல் நாள் வசூல்: கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கத்தில் முன்னதாக விஷ்ணு விஷால் தம்பி ருத்ரா நடிப்பில் வெளியான ஓஹோ எந்தன் பேபி படமே பெரிதாக கைகொடுக்கவில்லை. ஆனாலும், மாதவன் அவரை நம்பி ஜிடி நாயுடு பயோபிக்கை இயக்கக் கொடுத்தார். பெரிய வரலாற்றுக் கதையை சுருக்கமாக எந்தளவுக்கு மக்களுக்கு புரிய வைக்க முடியுமோ அந்தளவுக்கு கொடுத்துள்ளார் கிருஷ்ணகுமார் ராமகுமார். மாதவன், சத்யராஜ், ஜெயராம், துஷாரா விஜயன், பிரியாமணி, வினய் உள்ளிட்ட பல திறமையான நடிகர்கள் தங்கள் முழு பங்களிப்பும் கொடுத்த நிலையிலும், முதல் நாளில் ஜிடி நாயுடு திரைப்படம் வெறும் 59 லட்சம் மட்டுமே வசூல் செய்துள்ளது.
டிசி முதல் நாள் வசூல்: அதே நேரத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, கஸ்தூரி ராஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் அனிருத் இசையில் வெளியான டிசி திரைப்படம் முதல் நாளில் அதிகபட்சமாக 5.70 கோடி வசூலை உலகளவில் ஈட்டியுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
வின்னர் யாரு: ஜிடிஎன் படத்துக்காக மாதவனும் படக்குழுவும் ஏகப்பட்ட புரமோஷன்களை செய்தனர். ஆனால், டிசி படத்துக்காக லோகேஷ் கனகராஜ் மற்றும் அருண் மாதேஸ்வரன் கூட அதிகளவில் பேசவில்லை. ஆனால், முதல் நாள் வசூல் தகவலை பார்த்தாலே டிசி இந்த வாரம் வெளியான படங்களில் முதலிடத்தை பிடித்துள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இந்த 2 படங்களில் எந்த படங்கள் வசூலில் முந்துகிறது என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம். லோகேஷ் கனகராஜின் டிசி திரைப்படம் கோலிவுட்டுக்கு அடுத்த பிளாக்பஸ்டர் படமாக மாறும் என்றே பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.