📅 Thursday, 01 October 2026 IST | புரட்டாசி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics June 22, 2026 08:02 AM

DMK ADMK Alliance: பகையாளி அல்ல பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக

DMK ADMK Alliance: பகையாளி அல்ல பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக

DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?

சட்டமன்ற இடைத்தேர்தலில் தவெக-வை வீழ்த்த திமுக - அதிமுக இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த தேர்தலைப் பொறுத்தமட்டில் பலமிகுந்த திமுக, அதிமுக கட்சிகளை வீழ்த்தி முதல் தேர்தலிலே தவெக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

காத்திருக்கும் இடைத்தேர்தல்:

இந்த தேர்தல் முடிவுகளுக்கு பிறகு திமுக - அதிமுக கூட்டணி அமைக்க முயற்சித்ததாக பல தரப்பினரும் குற்றம் சாட்டினர். ஆனால், அப்படி நடக்கவில்லை என்று திமுக மறுப்பு தெரிவித்தது. இந்த சூழலில், தமிழ்நாட்டில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திராவிட கட்சிகள் தங்களுக்கு புதிய எதிரியாக உருவெடுத்துள்ள தவெக-வை இந்த இடைத்தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்று திட்டவட்டமாக உள்ளனர்.

பங்காளிகள்:

இந்த சூழலில், திமுக-வின் மூத்த தலைவரான ஆர்எஸ் பாரதி, திமுக-வில் இருந்து பிரிந்ததுதான் அதிமுக. அதிமுக தங்களுக்கு பகையாளிகள் அல்ல, பங்காளிகள்தான். திமுக-வும், அதிமுக-வும் கூட்டணி வைத்தால் ஒன்றும் தவறு அல்ல என்று பேசியுள்ளார். இது திமுக-அதிமுக கூட்டணி வைக்க முயற்சித்ததற்கான சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

அதேசமயம், வரும் இடைத்தேர்தலில் திமுக - அதிமுக இணைந்து களமிறங்க இருப்பதையும் இது ஏறத்தாழ உறுதி செய்துள்ளது. தாராபுரம், திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், பெருந்துறை, விராலிமலை மற்றும் மதுராந்தகம் ஆகிய 6 தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

திமுக - அதிமுக கூட்டணி உறுதியா?

இந்த இடைத்தேர்தலில் திமுக - அதிமுக ஆகிய கட்சிகள் இணைந்து பொது வேட்பாளர்களை இறக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த சூழலில் ஆர்எஸ் பாரதியின் பேட்டி இந்த கூட்டணி உறுதியாக இருப்பதையே மறைமுகமாக உணர்த்துகிறது.

இந்த இடைத்தேர்தலில் திமுக - அதிமுக - நாம் தமிழர் ஆகிய 3 கட்சிகளும் இணைந்து 3 +2 +1 என்ற கணக்கில் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேசமயம், ஆளுங்கட்சி என்ற அந்தஸ்துடன் களமிறங்க உள்ள தவெக 6 தொகுதிகளையும் கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கும். இதனால், வரும் இடைத்தேர்தல் தமிழ்நாட்டில் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தலில் தங்களிடம் இருந்து பறிபோன 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாலும், அதிமுக-வின் மிகவும் முக்கியமான நிர்வாகிகள் தற்போது தவெக பக்கம் தாவி இருப்பதாலும் அதிமுக தவெக-வை வீழ்த்தியே ஆக வேண்டும் என்று வைராக்கியமாக உள்ளனர்.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி