DMK: "மனக்கசப்புடன் இனியும் திமுகவில் தொடர முடியாது"
DMK: "மனக்கசப்புடன் இனியும் திமுகவில் தொடர முடியாது" - தோப்பு வெங்கடாசலம் சொல்வது என்ன?
"தி.மு.க- வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக தலைமைக்கு கடிதம் அனுப்பியிருக்கிறேன்" ! தோப்பு வெங்கடாசலம்.
அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், தி.மு.க- வின் முன்னாள் ஈரோடு மத்திய மாவட்ட செயலாளருமான தோப்பு வெங்கடாசலம், தி.மு.க- வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக இன்று (ஆகஸ்ட் 31- 2026) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தி.மு.க- வில் ஏற்பட்டது கசப்பான அனுபவம்
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், " தி.மு.க- வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக தலைமைக்கு கடிதம் அனுப்பியிருக்கிறேன். மத்திய மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கியதற்கு நன்றி.
தி.மு.க- வில் ஏற்பட்டது மிகவும் கசப்பான அனுபவம். எனக்கு ஏற்பட்ட இந்த மனசகப்புடன் இனியும் தி.மு.க- வில் தொடர முடியாதததால் விலகுகிறேன். இப்போதைக்கு வேறு எந்த இயக்கத்திற்கும் செல்லும் எண்ணம் எனக்கு இல்லை. தற்போதைக்கு வேறு இயக்கத்திற்கு செல்ல முயற்சிக்கவும் இல்லை .
முன்னாள் அமைச்சர் முத்துசாமி மீது எவ்வித குற்றசாட்டையும் கூறவில்லை. இறந்தகாலத்தை குறை கூறாமல் நிகழ்காலத்தை தொடர விரும்புகிறேன். பெருந்துறை பின்தங்கிய தொகுதியாக மாறியிருப்பது வருத்தமளிக்கிறது. தி.மு.க-விற்கு வந்த நோக்கமான பெருந்துறை- கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம் , அந்தக்கடவு - அவினாசி திட்டம் போன்றவை குறையாக உள்ளன. தி.மு.க தலைவர் ஸ்டாலின் என் மீது அளவற்ற பாசம் வைத்துள்ளார். நானும் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். எதிர்காலத்தில் என் பணிகள் பெருந்துறை தொகுதியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்" என தெரிவித்துள்ளார்.