📅 Friday, 07 August 2026 IST | ஆடி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 06, 2026 11:32 PM

DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக

DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக

DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை

தவெக அரசின் நிதிநிலை அறிக்கை மற்றும் பட்ஜெட்டை ஒப்பீடு செய்து திமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.

விஜய்யின் தவெக அரசு நேற்று தனது ஆட்சியின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இந்த நிலையில், இன்று வேளாண் நிதிநிலை அறிக்கையை தவெக அரசு தாக்கல் செய்தது.

இந்த நிலையில், தவெக அரசின் நிதிநிலை அறிக்கையையும், அவர்கள் வெளியிட்ட வெள்ளை அறிக்கையயும் ஒப்பிட்டு இன்று திமுக வெளியிட்டுள்ளது.

தவெகவை அம்பலப்படுத்திய தவெக: வெள்ளை அறிக்கை பொய் என்பதை நிரூபித்த பட்ஜெட்! தவெக வெள்ளை அறிக்கை vs தவெக பட்ஜெட் 2026-27: ஓர் ஒப்பீடு!

சமீபத்தில் தவெக அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கைக்கும், அவர்கள் தாக்கல் செய்த 2026-27 ஆம் ஆண்டிற்கான முதல் பட்ஜெட்டிற்கும் இடையே உள்ள நிதி முரண்பாடுகள்:

1. மாநிலத்தின் சொந்த வரி வருவாய் (SOTR)

முந்தைய திமுக அரசின் இடைக்கால பட்ஜெட்டில், மாநில வரி வருவாய் 19% அதிகரிக்கும் என்றும், அது ரூ.2,29,579 கோடியாக இருக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இது மிகவும் சாத்தியமற்றது என்றும், உண்மையில் 8% (ரூ.2,08,000 கோடி) மட்டுமே வரி வருவாய் வளரும் என்றும் தவெக தனது வெள்ளை அறிக்கையில் கடுமையாக விமர்சித்தது.

ஆனால், தற்போதைய தவெக பட்ஜெட்டில், தங்களின் புதிய திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக வரி வருவாய் 17.79% அதிகரிக்கும் (ரூ.2,26,740 கோடி) என்று கணக்குக் காட்டியுள்ளனர்.

திமுக கணித்த 19% வருவாய் வளர்ச்சி இலக்கு சாத்தியம் தான் என்பதை தவெக அரசு தனது சொந்த பட்ஜெட் மூலமாகவே மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளது.

2. மொத்த வருவாய் வரவுகள் (TRR)

திமுக பட்ஜெட்டில் மொத்த வருமானம் ரூ.3,44,575 கோடியாகக் கணிக்கப்பட்டிருந்தது மிகைப்படுத்தப்பட்ட கணக்கு என்றும், உண்மையான வருமானம் ரூ.3,30,575 கோடியாக மட்டுமே இருக்கும் என்றும் வெள்ளை அறிக்கை குறை கூறியது.

ஆனால், தவெகவின் புதிய பட்ஜெட்டில் மொத்த வருமானம் ரூ.3,50,027 கோடியாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

திமுக காட்டிய வருமானமே மிக அதிகம் என்று விமர்சித்த தவெக, அவர்களை விட ரூ.5,452 கோடி கூடுதலாக வருமானம் வரும் என்று தற்போதைய பட்ஜெட்டில் காட்டியுள்ளது என்றால் அது எவ்வாறு வரும்? மக்கள் மீதான வரி சுமையை மேலும் அதிகரிக்க போகிறதா?

3. வருவாய் பற்றாக்குறை (Revenue Deficit)

திமுக பட்ஜெட்டில் ரூ.48,696 கோடி வருவாய் பற்றாக்குறை என்று காட்டப்பட்டதை மறுத்த வெள்ளை அறிக்கை, அவர்கள் பல செலவுகளை மறைத்துவிட்டதாகவும், உண்மையான பற்றாக்குறை சுமார் ரூ.90,500 கோடியாக இருக்கும் என்றும் கூறியது.

ஆனால், தற்போதைய தவெக பட்ஜெட்டில் மொத்த வருவாய் பற்றாக்குறை ரூ.55,775 கோடியாக மட்டுமே காட்டப்பட்டுள்ளது.

வெள்ளை அறிக்கை கூறிய பற்றாக்குறையில், சுமார் ரூ.34,725 கோடி தற்போதைய பட்ஜெட்டில் திடீரென எப்படிக் குறைந்தது அல்லது எங்கே மறைக்கப்பட்டது என்ற கேள்வி எழுகிறது.

4. மூலதனச் செலவினம் (Capital Expenditure)

மாநிலத்தின் உள்கட்டமைப்புக்காக திமுக அரசு ஒதுக்கிய ரூ.59,562 கோடி மிகவும் குறைவானது என்றும், இது தவறான அணுகுமுறை என்றும் வெள்ளை அறிக்கை கூறியது.

ஆனால், தவெக அரசின் பட்ஜெட்டில் உள்கட்டமைப்புக்காக ரூ.56,985 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

திமுக ஒதுக்கிய நிதியே மிகக் குறைவு என்று குற்றம் சாட்டியவர்கள், தற்போதைய பட்ஜெட்டில் அதைவிட ரூ.2,577 கோடியைக் குறைத்து ஒதுக்கியுள்ளது மிகப்பெரிய முரண்பாடாகும்.

குற்றப்பத்திரிகை:

இந்தத் தரவுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தவெக அரசு தங்களது வெள்ளை அறிக்கையை மாநிலத்தின் உண்மையான நிதி நிலையைக் காட்டும் ஆவணமாகப் பயன்படுத்தவில்லை என்பது தெளிவாகிறது. மாறாக, அது உண்மையான தரவுகளைத் தருவதற்குப் பதிலாக, முந்தைய திமுக அரசின் மீது குற்றம் சுமத்துவதற்கான ஒரு அரசியல் குற்றப்பத்திரிகையாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்ட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி